உள்ளாட்சித் தேர்தல் முடிவை வெளியிட தடைகோரிய வழக்கு – உயர்நீதிமன்றம் அதிரடி

- தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு மட்டும் தேர்தல் அறிவிக்கப்பட்டது.
- ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுகளை வெளியிடக் கூடாது என்று தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் டிசம்பர் 27-ஆம் தேதி மற்றும் டிசம்பர் 30 ஆம் தேதி என இரண்டு கட்டங்களாக ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு மட்டும் தேர்தல் நடைபெறும் என்று தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது.ஆனால் மாநகராட்சி,நகராட்சி ,பேருராட்சி தேர்தல் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.ஊரக உள்ளாட்சிகளுக்கு முதற்கட்ட தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது.
இதற்கு இடையில் சென்னை உயர் நீதிமன்றத்தில் சட்டப் பஞ்சாயத்து இயக்கம் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.அந்த மனுவில், ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுகளை, நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் முடியும் வரை வெளியிடக் கூடாது என்று தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.இந்நிலையில் இன்று இந்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் விசாரித்தது.அதில் ,ஊரக உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கையை ஜனவரி 2ம் தேதி நடத்தி, தேர்தல் முடிவை வெளியிட தடையில்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.மேலும் சட்டப் பஞ்சாயத்து இயக்கத்தின் மனுவை தள்ளுபடி செய்தது நீதிமன்றம்.
லேட்டஸ்ட் செய்திகள்
ஏப்ரல் 16 ஐபிஎல் “சூப்பர் ஓவர்” நாளா? மீண்டும் மீண்டும் அதே நாளில் டெல்லிக்கு நடந்த சம்பவம்!
April 17, 2025
நெல்லையில் பரபரப்பு: நாங்குநேரி மாணவன் சின்னத்துரை மீது மீண்டும் தாக்குதல் நடத்திய கும்பல்.!
April 16, 2025