பிளாட்ஃபார்ம் டிக்கெட்டுகள் வழங்குவதற்கு தடை – தெற்கு ரயில்வே அதிரடி உத்தரவு

Default Image

சென்னையில் மறு உத்தரவு வரும் வரை பிளாட்ஃபார்ம் டிக்கெட்டுகள் வழங்குவதற்கு தடை விதித்து தெற்கு ரயில்வே உத்தரவு.

ராணுவத்தில் இளைஞா்கள் தற்காலிகமாகப் பணி செய்வதற்கு ‘அக்னிபத்’ என்ற புதிய திட்டம் மத்திய அரசு அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், இந்த திட்டத்தின் மூலம் ராணுவத்தின் மூன்று படை பிரிவுகளிலும் 4 வருட ஒப்பந்தத்தில் “அக்னி வீர் ” எனப்படும் வீரர்கள் பணியில் அமர்த்தப்பட உள்ளனர். ‘அக்னிபத்’ ஆட்சேர்ப்புத் திட்டத்திற்கான வயது வரம்பு 17.5 லிருந்து 23-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன்பின் அக்னிபத் திட்டத்தில் சேர விரும்புவோர் ஜூலை மாதம் முதல் பதிவு செய்யலாம் என மத்திய அரசு அறிவிக்கையையும் வெளியிட்டுள்ளது.

இதனிடையே, மத்திய அரசு கொண்டுவந்துள்ள அக்னிபாத் திட்டத்தை கைவிட வலியுறுத்தி நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் இளைஞர்கள் தன்னிச்சையாக போராட்டங்கள் நடத்தி வருகின்றன. குறிப்பாக, பிகார், தெலங்கானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் ரயில்கள் எரிப்பு, பொது சொத்துக்களை சேதப்படுத்துதல் உள்ளிட்ட போன்ற சம்பவங்கள் நிகழ்ந்து வருகிறது. இந்த நிலையில், சென்னை கோட்டத்தில் இருக்கும் அனைத்து ரயில் நிலையங்களிலும் பிளாட்ஃபார்ம் டிக்கெட்டுகள் வழங்கப்படுவது வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில், அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக நாடு தழுவிய வேலை நிறுத்தத்திற்கு முயற்சிகள், பாரத் பந்த் மற்றும் பயணிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டத்தில் உள்ள அனைத்து ரயில் நிலையங்களிலும், அடுத்த உத்தரவு வரும் வரை பிளாட்ஃபார்ம் டிக்கெட்டுகளை வழங்குவது தடை செய்யப்பட்டுள்ளது. எனவே, ரயில் பயனாளிகள் மற்றும் ரயில்வே சொத்துக்களின் பாதுகாப்பை நிலை நிறுத்துவதற்கு பயணிகள் மற்றும் பொதுமக்கள் இரயில்வேயுடன் ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என சென்னை பிரிவு PRO தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்