மறு வாக்கு எண்ணிக்கைக்கு தடை கோரிய வழக்கு ! தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்
ராதாபுரம் தொகுதி தேர்தல் மறு வாக்கு எண்ணிக்கைக்கு தடை கோரிய வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
2016- ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ராதாபுரம் தொகுதியில் வாக்கு எண்ணிக்கையின் போது 203 தபால் ஓட்டுகளை எண்ணவில்லை என திமுகவின் அப்பாவு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் ,கடைசி மூன்று சுற்று வாக்குகளையும், தபால் வாக்குகளை மட்டும் எண்ண உத்தரவு பிறப்பித்தது.
ராதாபுரம் தொகுதியில் மறு வாக்கு எண்ணிக்கைக்கு உத்தரவிட்ட நிலையில் அதிமுக எம்எல்ஏ இன்பதுறை தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. வழக்கின் விசாரணையை வழக்கு விசாரணை அக்டோபர் 3-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது உயர்நீதிமன்றம்.இதனை தொடர்ந்து இன்று இது தொடர்பான விசாரணை நடைபெற்றது.இதில் மறுவாக்கு எண்ணிக்கைக்கு தடை கோரிய அ.தி.மு.க எம்.எல்.ஏ இன்பதுரையின் மனுவை தள்ளுபடி செய்வதாக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.மேலும் நாளை காலை 11.30 மணிக்கு மறுவாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்று தெரிவித்துள்ளது.