மதுரையில் ஆயுதம் ஏந்தி ஊர்வலம் செல்ல தடை விதிப்பு!
ஆயுதல் ஏந்தியபடி ஊர்வலம், ஆர்ப்பாட்டம் நடத்த தடை விதித்து மதுரை மாநகர காவல்துறை அறிவிப்பு.
ஆயுதல் ஏந்தியபடி ஊர்வலம், ஆர்ப்பாட்டம், ஒத்திகை, பயிற்சி அல்லது கூட்டத்தில் பங்கேற்க தடை விதித்து மதுரை மாநகர காவல்துறை அறிவித்துள்ளது. அதன்படி, மதுரையில் இன்று முதல் 25-ஆம் தேதி வரை 15 நாட்களுக்கு பொது, தனியார் இடங்களில் ஆயுதம் ஏந்தியோ, ஆயுதம் ஏந்தி சீருடையிலோ ஊர்வலங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடத்த தடை விதிக்கப்படுகிறது.
பொது அல்லது தனியார் இடமாக்க இருந்தாலும் வரும் 25-ஆம் தேதி வரை ஊர்வலம், ஆர்ப்பாட்டம் பயிற்சிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், கூட்டங்கள் போன்றவை நடத்த 5 நாட்களுக்கு முன் விண்ணப்பிக்கலாம் எனவும் காவல்துறை தெரிவித்துள்ளது. 5 நாட்களுக்கு முன்பி விண்ணப்பிக்க தவறினால் அனுமதி நிராகரிக்கப்படும் மதுரை மாநகர காவல்துறை தெரிவித்துள்ளது.