வேல் யாத்திரைக்கு தடை – தொல். திருமாவளவன் பாராட்டு.!
பாஜக சார்பில் நடைபெறவிருந்த வேல் யாத்திரைக்கு தடை விதித்தற்கு தொல். திருமாவளவன் பாராட்டுகள் தெரிவித்துள்ளார்.
திருத்தணி முதல் திருச்செந்தூர் வரை நவம்பர்-6ம் தேதி முதல் டிசம்பர் 10-ம் தேதி வரை பாஜக சார்பில் வேல் யாத்திரை நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த வேல் யாத்திரையை நடத்த தடை விதிக்குமாறு பல்வேறு அரசியல் கட்சியினரும் தெரிவித்து வந்தனர்.
இதனையடுத்து, சென்னையை சேர்ந்த பத்திரிகையாளர் பாலமுருகன் மற்றும் செந்தில்குமார் ஆகியோர், வேல் யாத்திரைக்கு தடை விதிக்க கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் தனித்தனியாக வழக்குகள் தாக்கல் செய்திருந்தனர்.
இந்நிலையில், இன்று பாஜக சார்பில் நடைபெறவிருந்த வேல் யாத்திரைக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. கொரோனா 2ஆவது மற்றும் 3ஆவது அலைக்கான அச்சுறுத்தல் காரணமாக வேல் யாத்திரைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
தற்போது, இதற்கு பல்வேறு தரப்பினர் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், இது குறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் தனது டிவிட்டர் பக்கத்தில், வேல் யாத்திரைக்கு அனுமதி தர இயலாது என உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்.கொரோனா இரண்டாவது அலை பரவும் நிலையில் அனுமதிக்க இயலாது என்னும் அரசின் நிலைப்பாட்டினை வரவேற்கிறோம். நீதிமன்றமும் அதன்படி தீர்ப்பளிக்குமென நம்புகிறோம். முதல்வருக்கும் காவல்துறைக்கும் பாராட்டுகள் என்று அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.
#Rejected: வேல் யாத்திரைக்கு அனுமதி தர இயலாது என உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்.
கொரோனா இரண்டாவது அலை பரவும் நிலையில் அனுமதிக்க இயலாது என்னும் அரசின் நிலைப்பாட்டினை வரவேற்கிறோம்.
நீதிமன்றமும் அதன்படி தீர்ப்பளிக்குமென நம்புகிறோம். முதல்வருக்கும் காவல்துறைக்கும் பாராட்டுகள். pic.twitter.com/hLuPE61j9m— Thol. Thirumavalavan (@thirumaofficial) November 5, 2020