உரிமை மீறல் நோட்டீசுக்கு தடை – உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு

Published by
Venu

உரிமை மீறல் நோட்டீசுக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

தமிழக சட்டப்பேரவைக்கு தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட எம்.எல்.ஏக்கள் எடுத்து சென்றனர். அதற்கு எதிராக அவர்களுக்கு உரிமை மீறல் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதனை, எதிர்த்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உட்பட 18 எம்எல்ஏக்கள் உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த  வழக்கில் , ” குட்கா உரிமை மீறல் நோட்டீஸ் “ரத்து செய்யப்படுவதாக உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

பின்னர் மீண்டும் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதனால் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 18 திமுக எம்எல்ஏக்கள் சார்பில் உரிமைக்குழு மீண்டும் அனுப்பிய நோட்டீஸை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.  அப்பொழுது, மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 18 எம்.எல்.ஏக்களுக்கு கொடுக்கப்பட்ட உரிமை குழுவின் 2-வது நோட்டீஸ்க்கு இடைக்காலத் தடை விதித்து உயர்நீதிமன்ற நீதிபதி நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா உத்தரவு  பிறப்பித்தார்.மேலும் மறு உத்தரவு வரும் வரை தடை அமலில் இருக்கும் என்றும்  பேரவை தலைவர், செயலாளர்,  உரிமைக்குழு தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன் பதிலளிக்க உத்தரவு பிறப்பித்து  வழக்கு விசாரணையை அக்டோபர் 28 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார் நீதிபதி.

இந்நிலையில் சட்டமன்ற செயலாளர், உரிமைக்குழு தலைவர் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.  மு.க.ஸ்டாலின் உள்பட 18 எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான உரிமை மீறல் நோட்டீசுக்கு விதித்த தடையை நீக்க வேண்டும் என்றும்  நோட்டீசுக்கு தடை விதித்த உத்தரவை ரத்து செய்ய மனுவில் கோரிக்கை  விடுக்கப்பட்டுள்ளது . மேல்முறையீட்டு மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Published by
Venu

Recent Posts

தலைமறைவாக இருந்த நடிகை கஸ்தூரி ஹைதராபாத்தில் அதிரடி கைது..!

தலைமறைவாக இருந்த நடிகை கஸ்தூரி ஹைதராபாத்தில் அதிரடி கைது..!

ஹைதராபாத் : தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாகப் பேசிய வழக்கில் தலைமறைவாக இருந்து வந்த நடிகை கஸ்தூரி தற்போது ஹைதராபாத்தில்…

3 hours ago

ஹாக்கி மகளிர் ஆசியகோப்பை : சீனாவை வீழ்த்தி அரை இறுதியை உறுதி செய்த இந்தியா!

பீகார் : ஹாக்கியில் மகளிருக்கான 8-வது ஆசிய கோப்பைத் தொடரானது தற்போது பீகாரில் உள்ள ராஜ்கிரில் நடைபெற்று வருகிறது. இந்த…

4 hours ago

டிரம்பின் தலைமையில், போரானது விரைவில் முடிவுக்கு வரும்! உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பேச்சு!

மாஸ்கோ : கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி 24-ம் தேதி முதல், நோட்டோ அமைப்பு நாடுகளுடன் உக்ரைன் இணையக் கூடாது…

5 hours ago

நீங்க அப்பா..அண்ணானால வந்தீங்க ஆனால் நான்…? சினிமா பின்புலத்தை வைத்து தாக்கிய நயன்தாரா!

சென்னை : வரும் நவம்பர் 20-ஆம் தேதி நயன்தார-விக்னேஷ் சிவன் இருவரின் திருமண வீடியோ நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியாக இருக்கிறது.…

6 hours ago

“எதாவது ஒரு தொடரில் வாய்ப்பு கிடைக்கும்” …நம்பிக்கையுடன் காத்திருக்கும் ஷர்துல் தாகூர்!

மும்பை : இந்திய அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இந்த…

7 hours ago

தமிழகத்தில் 7 மணி வரை பரவலான மழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்!!

சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல காற்றழுத்த சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் தென்மாவட்டங்களில் ஒரு…

7 hours ago