தமிழகம் முழுவதும் பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் அமைப்புக்கு தடை விதித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகிய இருவரும் சிறையில் உயிரிழந்தனர். இந்த விவகாரம் தொடர்பாக சிபிசிஐடி விசாரணை மேற்கொண்டு வந்தது.சாத்தான்குளம் விவாகரத்தில் பிரண்ட்ஸ் ஆஃப் போலீசை அமைப்பை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்து வந்தது.இதனிடையே தூத்துக்குடியை சேர்ந்த அதிசய குமார் என்பர் மனித உரிமைகள் ஆணையத்தில் புகார் அளித்தார்.அதில் , பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் பல்வேறு அத்துமீறல்களில் ஈடுபட்டதாக தெரிவித்தார்.
எனவே தந்தை, மகன் கொலை வழக்கு தொடர்பாக சாத்தான்குளம் பிரண்ட்ஸ் ஆஃப் போலீசை சேர்ந்தவரிடம் சிபிசிஐடி விசாரணை மேற்கொண்டது.இதனிடையே பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் காவல் துறையால் அங்கீகரிக்கப்பட்ட அமைப்பா? என்று மனித உரிமை ஆணையம் கேள்வி எழுப்பியது.மேலும் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்பை தடை செய்வது தொடர்பாக தமிழக டிஜிபி மற்றும் உள்துறை செயலாளர் 4 வாரத்தில் பதில் அளிக்க மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது.
இந்நிலையில் தமிழகம் முழுவதும் பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் அமைப்புக்கு தடை விதித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.இது தொடர்பாக டிஜிபி மற்றும் அனைத்து மாவட்ட எஸ்.பி.களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…
சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…
பஞ்சாப் : இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…
பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…