10-ம் வகுப்பு பொதுத்தேர்வு அறிவிப்பை எதிர்த்து தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வரவுள்ளது.
அமைச்சர் செங்கோட்டையன் நேற்று முன்தினம் 10-ம் வகுப்புக்கு ஜூன் 1-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை நடைபெறும் என்று அறிவித்தார். இந்த அறிவிப்பை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ஸ்டாலின் ராஜா என்பவர் வழக்கு தொடர்ந்தார். அந்த மனுவில் அவர் கூறுகையில், தமிழகத்தில் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
தமிழகத்தில் இதுவரை 8, 718 பேர் பாதிக்கப்பட்டும், 61 பேர் இறந்துள்ளனர். இந்தியாவில் கொரோனா தாக்கம் வருகிற ஜூன், ஜூலை மாதங்களில் அதிகமாக இருக்கும் என மருத்துவ நிபுணர்கள் கூறியுள்ளனர். இந்நிலையில் 10-ம் வகுப்பு பொது தேர்வை நடத்தினால் கொரோனா வைரஸ் மாணவர்கள் மத்தியில் பரவி பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். எனவே அமைச்சரின் உத்தரவை ரத்து செய்யவேண்டும் என கூறிருந்தார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.
தமிழகத்தில் நேற்றுவரை 9,227 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளிலிருந்து தென்தமிழகம் வரை ஒரு வளி மண்டல சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழ்நாட்டில்…
சீனா : கடந்த மாதம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அமெரிக்காவின் பொருளாதாரத்தை கருத்தில் கொண்டு அமெரிக்கா பொருட்களுக்கு மற்ற…
அகமதாபாத் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் போட்டியில் குஜராத் அணியும், ராஜஸ்தான் அணியும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி…
சென்னை : தமிழகத்தில் நீட் தேர்வு ரத்து செய்யக்கோரி கோரிக்கைகள் எழுந்துகொண்டிருந்த சூழலில், இன்று இன்று (ஏப்ரல் 09) தமிழகத்தில் நீட்…
அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் குஜராத் அணியும், ராஜஸ்தான் அணியும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் மோதுகிறது.…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், மருந்துகளுக்கு பெரிய அளவில் இறக்குமதி வரி விதிக்கப்பட உள்ளதாக அறிவித்தது பெரும்…