கருணை காட்டாதீங்க., பொறியியல் கல்லூரிகளுக்கு பறந்த நோட்டீஸ்.! ஆளுநர் கடும் நடவடிக்கை.!
சென்னை : தமிழகத்தில் இயங்கும் பெரும்பாலான பொறியியல் கல்லூரிகள் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் கடுப்பாட்டின் கீழ் இயங்கி வருகிறது. மொத்தம் 450க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் இணைப்பில் உள்ளது. இந்த இணைப்பை பெறுவது தொடர்பாக பல்வேறு கல்லூரிகள் சட்டவிரோதமாக பேராசியர்கள் கணக்கு காட்டி வருவதாக குற்றசாட்டு எழுந்துள்ளது.
இது தொடர்பாக தன்னார்வ அமைப்பான அறப்போர் இயக்கம் முன்னதாக நடத்திய ஆய்வறிக்கையில் தமிழகத்தில் உள்ள 224 தனியார் சுயநிதி கல்லூரிகளில் சுமார் 350க்க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள், வெவ்வேறு காலகட்ட போட்டோக்கள், வெவ்வேறு அடையாள எண்கள் கொண்டு ஒன்றுக்கும் மேற்பட்ட கல்லூரிகளில் வேலை பார்ப்பது போல போலியாக கணக்கு கட்டப்பட்டுள்ளதாக புகார் குற்றசாட்டை முன்வைத்தனர்.
இந்த குற்றசாட்டை அடுத்து ஆளுநர் ஆர்.என்.ரவி அண்ணா பல்கலை கழக துணைவேந்தர் வேல்ராஜ் அவர்களுக்கு, இந்த விவகாரம் குறித்து முழுமையான அறிக்கையை தாக்கல் செய்யவேண்டும் என உத்தரவிட்டார்.
ஆளுநரின் உத்தரவை அடுத்து, பேராசியர்கள் விவகாரம் தொடர்பாக இதுவரை 295 கல்லூரிகளுக்கு அண்ணா பல்கலைக்கழகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில் 124 கல்லூரிகள் பேராசிரியர்கள் நியமனத்தில் முறைகேட்டில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது தொடர்பாக, ஆளுநர் ரவி, அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் வேல்ராஜ்க்கு பிறப்பித்த உத்தரவில், முறைகேட்டில் ஈடுபட்ட கல்லூரிகள் மீது கருணை கட்டக்கூடாது. கண்டிப்புடன் நடவடிக்கை எடுக்க வேண்டும். சம்பந்தப்பட்ட கல்லூரிகளில் குறைவான எண்ணிக்கையில் மாணவர்கள் இருந்தால் அவர்களை வேறு கல்லூரிக்கு மாற்றம் செய்து அந்த கல்லூரி உரிமத்தை கூட ரத்து செய்யயும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஆளுநர் ரவி கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இப்படியான சூழலில், இன்று அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆளுநர் ரவி, பல்கலைக்கழக உயர் அதிகாரிகள், நிர்வாகிகள் கலந்து கொள்ளும் சிண்டிகேட் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆலோசனை கூட்டத்தில் பேராசிரியர் நியமனத்தில் முறைகேட்டில் ஈடுபட்ட கல்லூரிகள் மீது எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்படும் என்றும், அதற்கடுத்து அதிகாரபூர்வ தகவல்கள் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.