பேராசிரியர்கள், ஊழியர்கள் பணிக்கு திரும்ப உத்தரவு – அண்ணா பல்கலைக்கழகம்
பேராசிரியர்கள், ஊழியர்கள் பணிக்கு திரும்புமாறு அண்ணா பல்கலைக்கழகம் உத்தரவு.
கொரோனா வைரஸின் தீவிர பரவலால், இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், பள்ளி, கால்லூரிகள், மக்கள் அதிகமாக கூடும் வணிக மற்றும் அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளது.
இந்நிலையில், தற்போது சில முக்கியமான விடயங்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர்கள் மற்றும் அலுவலக ஊழியர்கள் பணிக்கு திரும்புமாறு பல்கலைக்கழக நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா தலைமையில் நடைபெற்ற உயர்நிலைக்குழு ஆலோசனை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்ட நிலையில், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.