மகளிர் குழு தயாரிக்கும் பொருட்களை பரிசளிக்கலாம் – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
மற்றுமொரு மாற்றத்தை அன்பு இயக்கமாக தொடங்கலாம் என நினைக்கிறன் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு.
தன்னை சந்திக்கும் கழகத்தினர் இனிமேல் மகர் சுய உதவி குழுக்கள் தயாரிக்கும் பொருட்களை பரிசளிக்கலாம் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மற்றுமொரு மாற்றத்தை அன்பு இயக்கமாக தொடங்கலாம் என நினைக்கிறன். சமூகநீதி நோக்கத்தில் நாம் அடுத்த கட்டத்துக்கு செல்ல, சில பழைய நடைமுறைகளை கைவிடலாம் என்பதே இதன் நோக்கம் எனவும் கூறினார்.
தமிழகத்தில் மகளிர் மேம்பாட்டுக்கென அரசு பல திடங்களை செயல்படுத்தி வருகிறது. அரசு சுய மகளிர் உதவி குழுக்கள் கடன் அளித்து, தொழிற்பயிற்சி அளித்து, புதிய மாற்றங்களை நிகழ்த்தி வருகிறது. தமிழகத்தில் உள்ள மகளிர் சுய உதவி குழுக்கள், பல்வேறு பொருட்களை தயாரித்து வருகின்றன.
சிறுதானிய மதிப்பு கூட்டப்பட்ட உணவு பொருள், கைவினை பொருட்கள், மர சிற்பங்கள் என பலவற்றை தயாரித்து விற்பனை செய்யப்படுகிறது. சமீபத்தில் திண்டுக்கல், சிவகங்கை, கோவை, திருச்சி சென்றபோது கலைநயமிக்க பொருட்களை பார்த்து வியந்தேன்.
விற்பனையை அதிகரிப்பதன் மூலம் அந்த பெண்களின் பொருளாதாரம் மேம்படும். எனவே, பரிசாக வரும் மகளிர் சுய உதவி குழு தயாரிப்பு பொருட்களை ஆதரவற்ற குழந்தைகள், முதியோர் காப்பகங்களுக்கு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த எளிய வேண்டுகோள், ஏற்றமிகு மாற்றங்களை ஏற்படுத்தும் என நம்புகிறேன் என்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குறிப்பிட்டார்.