விரைவில் ஆவின் கூல்டிரிங்ஸ்.! பால்வளத்துறை அமைச்சர் தகவல்.!
ஆவின் மூலம் கூல்டிரிங்க்ஸ் தயாரிப்பதற்கான நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட உள்ளது. – பால்வள துறை அமைச்சர் நாசர் தகவல்.
தமிழ்நாடு அரசின் ஆவின் பால் நிறுவனத்தின் மூலம் அடுத்தடுத்த நடவடிக்கைகள் பற்றி அமைச்சர் நாசர் தெரிவித்தார். ஏற்கனவே ஆவின் மூலம் நெய் , ஸ்வீட்ஸ் தயாரிக்கப்பட்டு அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
அடுத்து, வருவது கோடை காலம் என்பதால் ஐஸ்க்ரீம் தயாரிக்கும் பணிகள் அதிகரிக்கப்படுத்த பட உள்ளன . அதே போல ஆவின் மூலம் கூல்டிரிங்க்ஸ் தயாரிப்பதற்கான நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட உள்ளது. என தெரிவித்தார்.
மேலும், ஆவினில் பல்வேறு பணிகளில் பணிபுரியும் 27,189 ஊழியர்களுக்கு 2.7 கோடி ரூபாய் பொங்கல் போனஸுகாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. எனவும் அமைச்சர் நாசர் தெரிவித்தார்.