நடிகர் சிம்பு தொடந்த வழக்கில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்துக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கு தொடர்பாக 1,080 நாட்களாகியும் எழுத்துப்பூர்வ வாதங்களை தாக்கல் செய்ய தாமதித்ததால் ரூ.1 லட்சம் அபராதத்தை விதித்து, இதனை மார்ச் 31-ஆம் தேதிக்குள் பதிவாளர் அலுவலகத்தில் செலுத்த வேண்டும் என்று தெரிவித்து, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.
அவதூறு பரப்பியதாக மைக்கேல் ராயப்பன் ரூ.1 கோடி மானநஷ்ட ஈடு வழங்க உத்தரவிடக்கோரி நடிகர் சிம்பு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார். இதற்கு பதில் மனு தாக்கல் செய்ய தாமதித்ததால் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்துக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, நடிகர் சிம்பு ‘அன்பானவன் அடங்காதவன் அசராதவன்’ படத்தை குளோபல் இன்ஃபோடெயின்மென்ட் நிறுவனம் சார்பாக மைக்கேல் ராயப்பன் தயாரித்திருந்தார். இந்தப் படம் வெளியாகி எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. இதனால் நடிகர் சிம்பு தங்களுக்கு முறையான ஒத்துழைப்பு வழங்கவில்லை என்றும் படம் தோல்வி அடைந்ததற்கு சிம்புவே காரணம் எனவும் தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் பல்வேறு ஊடகங்களுக்கு பேட்டியளித்தது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : இந்திய அணியின் இளம் கிரிக்கெட் வீரர்களான ருதுராஜ் கெய்க்வாட், இஷான் கிஷன், சஞ்சு சாம்சன் போன்ற வீரர்களுக்கு…
கோவை : ஆரோக்கியசாமி சாலை, ராமச்சந்திரா சாலை, டி.பி.ரோடு, லாலி சாலை, தடாகம் சாலை, கவுலிபிரவுன் சாலை, டி.வி.சாமி சாலை,…
சென்னை : விடுதலை 2 திரைப்படம் வெற்றிமாறனின் தலை சிறந்த படைப்புகளின் பட்டியலில் இடம் பெற்றுவிட்டது என்று தான் சொல்லவேண்டும். அந்த…
சென்னை : தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் 6-முதல் 12-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவியர்களின் உயர் கல்விக்கான செலவை…
சென்னை : மத்திய அரசின் தேசிய தேர்வு முகமையால் நடத்தப்படும் யுஜிசி – நெட் தேர்வு 30 பாடங்களுக்கு ஜனவரி 15,…
டெல்லி : கடந்த ஆகஸ்ட் மாதம் வங்கதேசத்தில் ஏற்பட்ட உள்நாட்டு கலவரத்தில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். இந்த உள்நாட்டு கிளர்ச்சி உச்சத்தில்…