#BREAKING: அவகாசம் தந்ததால் தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் ரத்து.!

Published by
Dinasuvadu desk

தயாரிப்பாளர் சங்க தேர்தல் ரத்து செய்யப்படுவதாக சிறப்பு அதிகாரி அறிவித்தார்.

தமிழ் திரைப்பட தாயாரிப்பாளர் சங்க தேர்தல் ஏப்.17 ஆம் தேதி நடைபெறவிருந்த நிலையில், கொரோனாவால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக தாயாரிப்பாளர் சங்க தேர்தல் நடைபெறாமல் இருந்தது. இதையடுத்து, தேர்தலை  ஜூன் 30-ம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்ற காலக்கெடுவை நீட்டிக்கக் கோரி விஷால் தரப்பு சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம்  தாயாரிப்பாளர் சங்க தேர்தலை வரும் செப்டம்பர் 30-ம் தேதிக்குள் நடத்த உத்தரவு பிறப்பித்தது. மேலும், அக்டோபர் 30-ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய சிறப்பு அதிகாரி ஜெய்சந்திரனுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில்,  தயாரிப்பாளர் சங்கத் தேர்தலை நடத்த செப்டம்பர் 30 ஆம் தேதி வரை சென்னை உயர்நீதிமன்றம் அவகாசமளித்ததால் தயாரிப்பாளர் சங்க தேர்தல் ரத்து செய்யப்படுவதாக சிறப்பு அதிகாரி அறிவித்தார். மேலும், புதிய தேர்தல் அட்டவணை கடிதம் வாட்ஸ் ஆப் மூலம் பின்னர் அறிவிக்கப்படும் என அறிவித்தார்.

 

Published by
Dinasuvadu desk

Recent Posts

“நான் மிகப்பெரிய தவறு செய்துவிட்டேன்.,” அமைச்சர் துரைமுருகன் பகிரங்க வருத்தம்!

“நான் மிகப்பெரிய தவறு செய்துவிட்டேன்.,” அமைச்சர் துரைமுருகன் பகிரங்க வருத்தம்!

சென்னை : திமுக பொதுச்செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன் அண்மையில் தனது தொகுதியான காட்பாடியில் நடைபெற்ற கட்சி நிகழ்வில் பேசுகையில், மாற்றுத்திறனாளிகள்…

28 minutes ago

அமைச்சர் பொன்முடி பதவியில் திருச்சி சிவா! மு.க.ஸ்டாலின் பரபரப்பு அறிவிப்பு!

சென்னை : திமுக அமைச்சர் பொன்முடி அண்மையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பேசுகையில், உடலுறவு குறித்து மறைமுகமாக இரு சமூகத்தை…

57 minutes ago

தமிழிசையின் இல்லத்திற்கு சென்று ஆறுதல் கூறிய அமித் ஷா.!

சென்னை : இரண்டு நாள் பயணமாக தமிழ்நாடு வந்திருந்திருக்கும் உள்துறை அமைச்சர் அமித்ஷா, தமிழிசை சௌந்தரராஜன் வீட்டிற்கு நேரில் சென்று…

1 hour ago

சர்ச்சை பேச்சு எதிரொலி! பொன்முடியின் திமுக துணை பொதுச்செயலாளர் பதவி பறிப்பு!

சென்னை : அண்மையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட அமைச்சர் பொன்முடி, விலைமாது பெண் பற்றி கதை கூறினார்.…

2 hours ago

“இது என் கிரவுண்ட்.,” கே.எல்.ராகுலின் ‘மரணமாஸ்’ கொண்டாட்டம்! வைரலாகும் வீடியோ….

பெங்களூரு : நேற்றைய ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் , டெல்லி கேபிட்டல்ஸ் அணியும் விளையாடின. இதில்…

2 hours ago

அமைச்சர் பொன்முடியின் ‘கொச்சை’ பேச்சு! “ஏற்றுக்கொள்ள முடியாது!” கனிமொழி கடும் கண்டனம்!

சென்னை : தமிழ்நாடு வனத்துறை அமைச்சர் பொன்முடி சமீபத்தில் ஒரு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு, அவர் பேசிய பேச்சுக்கள்…

3 hours ago