படிப்படியாக மதுவிலக்கு கொண்டு வரப்படும் : ராஜேந்திர பாலாஜி
- படிப்படியாக மதுவிலக்கு கொண்டுவரப்படும் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.
இன்றைய சமூகத்தில் அனைத்து குடும்பங்களும் சீரழிந்து போறதற்கு முக்கிய காரணமே இந்த குடி தான். இதற்காக பலரும் போராட்டங்களை மேற்கொண்டாலும், அதற்கு தீர்வு கிடைத்த பாடு இல்லை.
தேர்தல் அறிக்கைகள் பல வெளியிடப்பட்டாலும், மக்கள் அதிகமாக எதிர்பார்த்து காத்திருப்பது பூரண மதுவிலக்கு தான். இதுவரையில் போராடிய பலர் சிறை சென்றுள்ளார்களே தவிர, அதற்கு இதுவரையில் தீர்வு கிடைக்கவில்லை.
இதுகுறித்து கூறிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, குடிப்பவர்கள் உடனடியாக குடியை நிறுத்தினால், நரம்பு தளர்ச்சி ஏற்பட வாய்ப்புள்ளதாகவும், உயிருக்கு ஆபத்து ஏற்படுவதாகவும் கூறியுள்ளார். மேலும் இதுகுறித்து கூறிய அவர், மக்களின் நலனை கருத்து கொண்டு படிப்படியாக மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என கூறியுள்ளார்.