#BREAKING: 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகளை வெளியிடுவதில் சிக்கல்.!
தமிழகத்தில் பள்ளிகளை திறக்க நீண்டகாலம் ஆகலாம் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
ஜூலை முதல் வாரத்தில் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு முடிவு வெளியாகும் என கூறிய நிலையில் அமைச்சர் செங்கோட்டையன் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகளை வெளியிடுவதில் சிக்கல் உள்ளது என தெரிவித்துள்ளார்.
முதல்வரிடம் ஆலோசனை நடத்திய பிறகு இரண்டாம் வகுப்பு தேர்வு முடிவு வெளியிடப்படும். தமிழகத்தில் இப்போதைய சூழலில், பள்ளிகளைத் திறப்பது சாத்தியமற்றது, பள்ளிகள் திறக்க நீண்ட காலம் ஆகலாம் என கோபிசெட்டிபாளையம் அருகே செங்கோட்டையன் பேட்டி அளித்துள்ளார்.