அஞ்சலக GDS பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதில் இருந்த சிக்கல் தீர்ந்தது – சு.வெங்கடேசன் எம்.பி

Default Image

தமிழ்நாட்டு மாணவர்கள் அஞ்சலக GDS பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதில் இருந்த சிக்கல் தீர்ந்தது என சு.வெங்கடேசன் எம்.பி ட்வீட்.

கடந்த 6-ஆம் தேதி அஞ்சல் தேர்வில் தமிழ்நாட்டு மாணவர்கள் விண்ணப்பிக்க முடியாதபடி தேர்வு படிவம் உள்ளதால், மும்மொழி திட்டத்தில் படிக்கும் மாணவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். எனவே தேர்வு படிவத்தை உடனே மாற்ற அஞ்சல் துறை செயலாளருக்கு சு.வெங்கடேசன் எம்.பி கடிதம்  எழுதி இருந்தார்.

இந்த நிலையில், தமிழ்நாட்டு மாணவர்கள் அஞ்சலக GDS பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதில் இருந்த சிக்கல் தற்போது தீர்க்கப்பட்டுள்ளதாக சு.வெங்கடேசன் எம்.பி அவர்கள் ட்வீட் செய்துள்ளார்.

மகிழ்ச்சி – சு.வெங்கடேசன் எம்.பி ட்வீட் 

su venkatesan mp

அந்த ட்விட்டர் பதில், விண்ணப்பத்தில் இருந்த தடை நீங்கியது. தமிழ்நாட்டு மாணவர்கள் அஞ்சலக GDS பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதில் இருந்த சிக்கல் தீர்ந்தது. அதற்குரிய மாற்றங்கள் செய்யப்பட்டு விட்டதாக அஞ்சல் துணை இயக்குநர் ராசி செய்தி அனுப்பி உள்ளார். 3நாள் கால நீட்டிப்பும் வழங்கப்பட்டுவிட்டது. மகிழ்ச்சி.’ என பதிவிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்