பிரியா மரணம் தாங்க முடியாத துயரம்! – முதலமைச்சர் ட்வீட்

Default Image

சென்னையில் பிரியாவின் வீட்டுக்கு சென்று ஆறுதல் கூறிவிட்டு, வீடு வழங்கும் ஆணையை வழங்கிய பின் முதலமைச்சர் ட்வீட்.

சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த கல்லூரி மாணவியும், கால்பந்து விளையாட்டு வீராங்கனையுமான பிரியா கால் வலியால் சமீபத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், மருத்துவர்களின் கவனக்குறைவு மற்றும் தவறான சிகிச்சை காரணமாக பரிதாபமாக உயிரிழந்தார்.

கால்பந்து வீராங்கனை பிரியா தவறான சிகிச்சை காரணமாக உயிரிழந்த நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், இன்று வீராங்கனை பிரியாவின் இல்லத்திற்கு சென்று, அவரது உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

அதனை தொடர்ந்து, அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி, ரூ.10 லட்சம் நிதி, குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை, அரசு சார்பாக வீடு ஒதுக்கியதற்கான ஆணைகளை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இதன்பின், பிரியாவின் பதக்கங்களையும், சான்றிதழ்களையும் பார்வையிட்டார்.

இந்த நிலையில், தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள முதலமைச்சர் முக ஸ்டாலின், கால்பந்தாட்ட வீராங்கனை ப்ரியாவின் மரணம் தாங்க முடியாத துயரம். ஏற்றமிகு உயரத்தை எட்டவிருந்த திறமைசாலியான அவரது இழப்பு, அவரது குடும்பத்துக்கும் – நம் மாநில விளையாட்டுத்துறைக்கும் ஏற்பட்ட மாபெரும் இழப்பு.

அவரை இழந்து வாடும் குடும்பத்தினர்க்கு அரசு அனைத்து வழிகளிலும் உதவியாய் நிற்கும் என்றும் இவை அனைத்தும் பிரியாவின் உயிர்க்கு ஈடாகாது எனவும் வருத்தத்துடன் தெரிவித்துள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்