தெலுங்கானாவில் நேற்று பிரியங்கா கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட நான்கு பேரை போலீசார் என்கவுண்டர் செய்த சம்பவம் இந்திய அளவில் மிகப் பெரிய அளவில் பேசப்பட்டது. இந்த என்கவுண்டருக்கு பல திரைப்பட பிரபலங்கள் , அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் கருத்து தெரிவித்தனர்.
அந்தவகையில் நேற்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.அப்போது , நான் இந்த என்கவுண்டரை வரவேற்கிறேன். மரணம் என்பது எந்த ஒரு குற்றத்துக்கு தீர்வாகாது என்று போராடுபவர் நாங்கள் ஆனால் பெண்களை இது போன்று சீரழிக்கும் அவர்களுக்கு மரணத்தை தவிர வேறு எதுவும் சிறந்த தண்டனை இருக்க முடியாது.
பொள்ளாச்சியில் மிகப்பெரிய சம்பவம் ஒன்று நடந்திருக்கிறது.அதில் குற்றவாளிகள் 90 நாட்களுக்கு ஜாமீன் பெற்று வெளியில் வந்துவிடுகின்றனர்.இதெல்லாம் மிகப்பெரிய கொடுமை .இது போன்று பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் ஈடுபடுபவர்களை மக்கள் முன் வைத்து சுட்டால் தான் ஒருவித பயம் வரும்.
இதுபோன்ற கொடூரர்களுக்கு சரியான தண்டனை இல்லை என்றால் குற்றம் குறையாது. மேலும் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இது தான் செய்வோம் பாலியல் குற்றத்திற்கு ஒரே தண்டனை இருக்கும்.
ஆறு வயது குழந்தையை பாலியல் கொடுமை செய்கிறவனை தண்டிக்காமல் சிறையில் அடைத்து கொண்டாடுவது அதைவிட கொடுமை வேறு எதுவும் இல்லை என கூறினார்.
டெல்லி : ஆம் ஆத்மி கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்த கைலாஷ் கெலாட் தனது அமைச்சர் பதவி மற்றும் ஆம்…
சான் பிரான்சிஸ்கோ : உலக பணக்காரர்களில் முதன்மையானவர்களாக இருக்கும் எலான் மஸ்க், தனது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்ஷிப் மூலம்…
சென்னை : மாலத்தீவு மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகள் முதல் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் வரை…
இஸ்ரேல் : வடக்கு இஸ்ரேலிய நகரமான சிசேரியாவில் உள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வீட்டிற்கு வெளியே பிளாஷ் வெடிகுண்டுகள்…
சென்னை: இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் சூரி நடிக்கும் "விடுதலை 2" படத்தின் பர்ஸ்ட் சிங்கிளான 'தினம்…
சென்னை : பகுஜன் சமாஜ்வாடி கட்சியின் மாநிலத் தலைவராக பொறுப்பில் இருந்த ஆம்ஸ்ட்ராங்கை கடந்த ஜூலை மாதம் ஒரு கும்பல்…