#Election Breaking : முதல் முறையாக பிரச்சாரம் மேற்கொள்ள தமிழகம் வருகிறார் பிரியங்கா காந்தி…!
தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்வதற்காக, முதல் முறையாக நாளை மறுநாள், காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி அவர்கள் தமிழகம் வருகிறார்.
தமிழகத்தில் ஏப்.6ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறும் நிலையில், தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது. அனைத்து கட்சி தலைவர்களும், சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், தங்களது காட்சி வேட்பாளர்களை பிரச்சாரம் மேற்கொள்ள, முக்கிய அரசியல் பிரபலங்கள் தமிழகம் வருகின்றனர். அந்த வகையில், தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்வதற்காக, முதல் முறையாக நாளை மறுநாள், காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி அவர்கள் தமிழகம் வருகிறார். இவர் கன்னியாகுமரியில் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து, திங்கள் நகரில் பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ளார்.