மதம் மாறியதற்காக சலுகைகள் மறுக்கக்கூடாது – தனி தீர்மானம் தாக்கல் செய்தார் முதலமைச்சர்!
கிறிஸ்துவர்களாக மாறிய அதிதிராவிடர்களுக்கும் சலுகைகள் கிடைக்கும் வகையில் சட்டத்தில் திருத்தம் தேவை என தனி தீர்மானம்.
கிறிஸ்துவராக மதம் மாறிய ஆதிதிராவிடர்கள் சமூகநீதி பயன்களை பெற தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்தார். இதன் பின் சட்டப்பேரவையில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்திய அரசமைப்புச் சட்டத்தில் பட்டியலின மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள சட்ட ரீதியிலான பாதுகாப்பு, உரிமைகள் மற்றும் இட ஒதுக்கீடு உள்ளிட்ட சலுகைகளை கிறித்துவராக மதம் மாறிய ஆதிதிராவிடர்களுக்கும் விரிவுபடுத்த வேண்டும் என்றார்.
அவர்களும் அனைத்து வகையிலும் சமூகநீதியின் பயன்களைப் பெற அரசமைப்புச் சட்டத்தில் உரிய திருத்தங்கள் மேற்கொள்ளுமாறு இந்திய அரசை இப்பேரவை ஒருமனதாக வலியுறுத்துகிறது. மதம் மாறிவிட்டார்கள் என்பதற்காக சமூகநீதியை மறுப்பது சரியாகாது. மனிதர்கள் தாம் விரும்பும் மதத்தை பின்பற்ற உரிமை உண்டு. சாதி என்பது உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்ற ரீதியில் சமூக கேடாக இருக்கிறது.
சமூக நீதி தத்துவத்தை முறையாக பிறப்பற்ற வேண்டும் என்பதே திராவிட மாடல் இயக்கத்தின் நோக்கம். சலுகை வழங்கப்பட்டால்தான் கல்வி உள்ளிட்டவற்றில் அவர்களால் மேலே வர முடியும். பட்டியலின் மக்களுக்கு இனியாக கிறிஸ்துவ ஆதிதிராவிட மக்களுக்கு சலுகைகளை அரசு வழங்கி வருகிறது. எனவே, மதம் மாறியதற்காக சலுகைகள் மறுக்கக்கூடாது என வலியுறுத்துகிறோம் என்றார்.