முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் பொதுமக்கள் புகார் அளிக்க தனிப்பிரிவு இணையதளம் தொடக்கம்…!
- தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களிடம் பொதுமக்கள் புகார் அளிக்க cmcell.tn.gov.in என்ற தனிப்பிரிவு இணையதளம் தொடக்கபட்டுள்ளது.
- பொதுமக்கள் வழங்கிய புகார்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் இணையத்தில் உடனடியாக தெரிந்து கொள்ளலாம்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், தமிழக முதல்வராக பொறுப்பேற்ற நாள் முதல் மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார். கொரோனா வைரஸின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வரும் இந்த காலகட்டத்தில், தொற்று பரவலை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இதனையடுத்து, தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த காலங்களில் மக்களின் வறுமையை போக்கும் வண்ணம் தமிழக அரசு, கொரோனா நிவாரண தொகை மற்றும் மளிகை பொருட்கள் வழங்குதல் போன்ற பல நலத்திட்ட உதவிகளை, மக்களுக்கு செய்து வருகிறது.
இந்நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களிடம் பொதுமக்கள் புகார் அளிக்க cmcell.tn.gov.in என்ற தனிப்பிரிவு இணையதளம் தொடக்கபட்டுள்ளது. மேலும், பொதுமக்கள் வழங்கிய புகார்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் இணையத்தில் உடனடியாக தெரிந்து கொள்ளலாம்.
தமிழ்நாடு முதலமைச்சர் திரு. @mkstalin அவர்களிடம் பொதுமக்கள் புகார் அளிக்க தனிப்பிரிவு இணையதளம் தொடக்கம்!https://t.co/0oj3PxhH8B
பொதுமக்கள் வழங்கிய புகார்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் இணையத்தில் உடனடியாக தெரிந்து கொள்ளலாம்.#DMK #MKStalin pic.twitter.com/tv8rEHrD4N
— DMK (@arivalayam) June 9, 2021