தமிழகம் முழுவதும் நாளை முதல் நடைபெற இருந்த தனியார் தண்ணீர் லாரிகளின் போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளதாக தனியார் தண்ணீர் லாரிகள் சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழகம் முழுவதும் சுமார் 25,000 தனியார் தண்ணீர் லாரிகள் இயக்கப்படுகின்றன. அதில், சென்னையில் மட்டும் தினமும் 5,000 லாரிகள் இயங்குகிறது. இந்த நிலையில், கடும் தண்ணீர் தட்டுப்பாட்டால் தண்ணீர் எடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், அவ்வாறு தண்ணீர் கிடைக்கும் இடங்களிலும் பொதுமக்கள் தண்ணீர் எடுக்க விடாமல் பிரச்சனை செய்வதாவும் கூறி நாளை முதல் தமிழகம் முழுவதும் தொடர் வேலைநிறுத்த போராட்டம் நடத்த முடிவு செய்திருந்தனர்.
இந்நிலையில், இன்று மாலை அரசு அதிகாரிகளுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை முடிவில், தண்ணீர் எடுக்க அனுமதி தருவதாகவும், தண்ணீர் லாரியில் செல்லும் ஓட்டுனர்கள் அனைவருக்கும் பாதுகாப்பு வழங்கப்படும் என்று உறுதியளித்தனர். இதையடுத்து, நாளை நடைபெற இருந்த போராட்ட அறிவிப்பானது வாபஸ் பெறப்பட்டுள்ளது.
சென்னை : இன்று ஐபிஎல் போட்டிகள் தொடங்கப்போகிறது என்றாலும் கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் ஆவலுடன் காத்திருப்பது என்றால் நாளை சென்னை…
டெல்லி : ஐபிஎல் போட்டிகள் தொடங்கிவிட்டது என்றாலே கிரிக்கெட் ரசிகர்களை கையில் பிடிக்க முடியாது என்று சொல்லலாம். ஏனென்றால், அந்த…
கொல்கத்தா : இந்த வருடத்திற்கான ஐபிஎல் போட்டி இன்று முதல் தொடங்கப்படவுள்ளது. இன்று நடைபெறும் முதல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்…
கொல்கத்தா : 18-வது ஐபிஎல் சீசன் கிரிக்கெட் தொடர் இன்று முதல் தொடங்குகிறது. இன்றயை முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான…
சென்னை : தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் அரசியல் வட்டாரத்தில் ஹாட் டாப்பிகாக மாறியிருக்கும் நிலையில், இந்த விவகாரத்தில் கூட்டு நடவடிக்கைக் குழு…
சென்னை : மக்கள் தொகை அடிப்படையிலான நாடாளுமன்ற தொகுதிகள் மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து, சென்னையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்…