#BREAKING : தனியார் பள்ளிகள் 40 % கல்விக்கட்டணம் வசூலிக்கலாம் -உயர்நீதிமன்றம் உத்தரவு

தனியார் பள்ளிகள் 40 % கல்விக் கட்டணத்தை ஆகஸ்ட் 31-ஆம் தேதிக்குள் வசூலிக்கலாம் என்று உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
தனியார் பள்ளிகள் வசூலிக்க வேண்டிய கல்விக் கட்டணம் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.இந்த வழக்கின் விசாரணை இன்று நடைபெற்ற நிலையில் , கல்விக் கட்டணம் குறித்து ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் அமைக்கப்பட்ட குழு முடிவெடுக்கும் என தமிழக அரசு பதில் தெரிவித்தது. இதனையடுத்து, தமிழக அரசு, தற்போதைய சூழலில் 75% கல்வி கட்டணம் வசூலித்து கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அதாவது மூன்று தவணைகளாக கட்டணத்தை வசூலித்துக் கொள்ள தனியார் பள்ளிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தது.
இதனைத்தொடர்ந்து தனியார் பள்ளிகள் 40 % கல்விக் கட்டணத்தை ஆகஸ்ட் 31-ஆம் தேதிக்குள் வசூலிக்கலாம் என்று உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 2019-2020 கல்விக் கட்டண பாக்கியை ஆகஸ்ட் 30-ஆம் தேதிக்குள் செலுத்த அனுமதி அளித்துள்ளது. 35 சதவீத கல்விக் கட்டணத்தை 2 மாதங்களுக்கு பிறகு தனியார் பள்ளிகள் வசூலிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்டண நிர்ணய குழு, கட்டண நிர்ணய நடைமுறையை ஆகஸ்ட் முதல் 8 மாதங்களுக்குள் முடிக்க வேண்டும் என்று கூறி வழக்கினை ஆகஸ்ட் 5-ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது நீதிமன்றம்.
லேட்டஸ்ட் செய்திகள்
மீனவர்கள் பிரச்சனை: “கூட்டுப் பணிக்குழுவை உடனடியாக கூட்டுங்கள்..” – மு.க.ஸ்டாலின் கடிதம்.!
February 23, 2025
NDvsPAK : டாஸில் மோசமான சாதனை படைத்த இந்தியா!! விக்கெட்டுகளை இழந்து மந்தமாக ஆடி வரும் பாகிஸ்தான்…
February 23, 2025
வசூல் ராஜா யாரு? டிராகனா? NEEK-ஆ? இரண்டு படங்களின் பாக்ஸ் ஆபிஸ் விவரம்.!
February 23, 2025