தனியார் பள்ளிகளில் 75% மட்டுமே கட்டணம் வசூலிக்க வேண்டும்-அன்பில் மகேஷ்..!

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தனியார் பள்ளிகளில் 75% மட்டுமே கட்டணம் வசூலிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
கரூரில் இருக்கும் நூலகத்தை ஆய்வு செய்ய சென்ற அமைச்சர் அன்பில் மகேஷ் நூலகத்தின் வசதிகள் மற்றும் பள்ளிகளில் இருக்கும் பாதுகாப்பான சூழல் குறித்து ஆய்வில் மேற்பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், மாணவிகளின் பாதுகாப்புக்காக பள்ளிகளில் சிசிடிவி கேமரா பொருத்தப்படும் என்று கூறினார்.
அதனை தொடர்ந்து தனியார் பள்ளிகளில் நீதிமன்ற வழிகாட்டுதல் படி கட்டணம் வசூலிக்கப்படும் என்று கூறினார். அந்த வழிகாட்டுதல் படி, தனியார் பள்ளிகளில் இரண்டு தவணைகளாக 75% கட்டணம் வசூலிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
KKR vs SRH : ஹைதராபாத்தின் மிரட்டல் பந்துவீச்சு! இறுதியில் பொளந்து கட்டிய கொல்கத்தா! டார்கெட் 201!
April 3, 2025
அமெரிக்க வரி விவகாரம் : “மத்திய அரசு என்ன செய்யப் போகிறது?” ராகுல் காந்தி சரமாரி கேள்வி!
April 3, 2025
“பாஜகவால் அதிகம் பாதிக்கப்பட்டது நானும், கேரள முதலமைச்சரும் தான்.!” மு.க.ஸ்டாலின் பேச்சு!
April 3, 2025