தனியார் பள்ளிகள் ஆகஸ்ட் 31 ஆம் தேதிக்குள் 40 சதவீதம் மட்டுமே கட்டணம் வசூல் செய்ய வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
தனியார் பள்ளிகளில் முதல் தவணையில் 40 சதவீதமும், 2 ம் தவணையில் 35 சதவீதம் என 75 சதவீதம் கட்டணங்களை மட்டுமே வசூல் செய்ய வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நந்தகுமாா் உத்தரவிட்டுள்ளார்.
மேலும்,இது தொடர்பாக,அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள்,மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குநர் ஆகியோருக்கு அவர் அனுப்பி உள்ள கடிதத்தில், “கொரோனா இரண்டாவது அலை காரணமாக தமிழகத்தில் உள்ள பள்ளிகள் 2021 ஏப்ரல் 24 தேதி முதல் மூடப்பட்டுள்ளன.
இதனைத் தொடர்ந்து,2021-22 ஆம் கல்வியாண்டிற்கான நேரடி வகுப்புகள் தற்போது வரை தொடங்கப்படவில்லை. இந்நிலையில் இந்தக் கல்வி ஆண்டில் தனியார் பள்ளிகளில் வசூலிக்கப்படும் பள்ளிக் கட்டணங்கள் குறித்து பல்வேறு தரப்பினரிடம் இருந்து புகார்கள் வருகின்றன.
எனவே,பெருந்தொற்றுக் காலத்தைக் கணக்கில் கொண்டு, அனைத்து சுயநிதி தனியார் பள்ளிகளும் 75 சதவீதக் கட்டணத்தை மட்டுமே வசூலிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.அதன்படி,முதல் தவணையாக 40 சதவீதம் கட்டணத்தை ஆகஸ்ட் 31 ந் தேதிக்குள் வசூல் செய்யலாம். மீதமுள்ள 35 சதவீதம் கட்டணத்தை நேரடி வகுப்புகள் தொடங்கியப் பின்னர் 2 மாதங்களில் வசூல் செய்து கொள்ளலாம்.
மேலும்,மீதமுள்ள 25 சதவீதக் கட்டணத்தைப் பொறுத்தவரை, பெருந்தொற்றுக் காலத்தைக் கணக்கில் கொண்டு பின்பு முடிவெடுக்கப்பட்டு,அறிவிக்கப்படும்”, என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து,பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது: ”தனியார் பள்ளிகள் முதல் கட்டமாக 40 சதவீதக் கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும்.அந்த தொகையையும் சில பெற்றோர்கள் ஆகஸ்ட் 31-ம் தேதிக்குள் செலுத்த முடியாத பட்சத்தில் உரிய காரணங்களைத் தெரிவித்து,கால அவகாசத்தைப் பெற்றுக் கொள்ளலாம். இதில் ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால் பள்ளிக் கல்வித்துறை புகார் எண் 14417-ஐத் தொடர்பு கொள்ளலாம்” என்று தெரிவித்துள்ளனர்.
சென்னை : சினிமாவை பொறுத்தவரையில் நடிகர்களுக்குள் போட்டிகள் இருந்தாலும் அது ஆரோக்கியமான போட்டியாகத் தான் இருக்கும். அந்த போட்டியை சினிமாவை…
சென்னை : இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் ஸ்டாலினிடம் அதானியுடன் தமிழக முதலவர் சந்திப்பு நிகழ்ந்ததா என்பது குறித்து விளக்கம்…
ஜெட்டா : ஐபிஎல் தொடருக்காக நடைபெற்று வரும் மெகா ஏலத்தின் இரண்டாம் நாள் இன்று தொடங்கியுள்ளது. இந்த ஏலத்தில் தொடக்கமே…
இந்நிலையில், வரவிருக்கும் நாட்களில் எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கிறது? காற்றழுத்த தாழ்வின் நிலை என்ன என்பது குறித்து வானிலை…
சென்னை : சர்வதேச அளவில், இன்று பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு தமிழகத்தில் பல…
சென்னை :சட்டுனு ஒரு சைடு டிஷ் வேணுமா?. அப்போ இந்த புளி மிளகாய் ரெசிபியை ட்ரை பண்ணி பாருங்க.. தேவையான…