தனியார் பள்ளிகள் கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை – அமைச்சர் செங்கோட்டையன்
தனியார் பள்ளிகள் கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தமிழகத்தில் இதுவரை கொரோனா வைரஸால், 31,667 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 269 பேர் இந்த வைரஸ் தாக்கத்தால் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், ஊரடங்கால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள், ‘தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகள் கூடுதல் கட்டணத்தை வசூலித்தல், அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மூலம் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், தனியார் பள்ளிகள் உடனடியாக கட்டணம் வசூலிக்க கூடாது வேண்டும், ஆன்லைன் மூலமாகவும் பெற்றோரை வற்புறுத்தக் கூடாது என்றும் தெரிவித்துள்ளார்.