தனியார் பள்ளிகளில் 75% கல்வி கட்டணம் வசூலிக்க அனுமதி!

தனியார் பள்ளிகளில் 75% கல்வி கட்டணம் வசூலிக்க அனுமதி.
இன்று தனியார் பள்ளிகள் வசூலிக்க வேண்டிய கல்விக் கட்டணம் குறித்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, கல்விக் கட்டணம் தொடர்பாக நிபுணர் குழு அமைத்து முடிவெடுக்கலாம் என தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் தெரிவித்தது.
அதன்படி, கல்விக் கட்டணம் குறித்து ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் அமைக்கப்பட்ட குழு முடிவெடுக்கும் என தமிழக அரசு நீதிமன்றத்தில் தெரிவித்தது. இதனையடுத்து, தமிழக அரசு, தற்போதைய சூழலில் 75% கல்வி கட்டணம் வசூலித்து கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அதாவது மூன்று தவணைகளாக கட்டணத்தை வசூலித்துக் கொள்ள தனியார் பள்ளிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
மேலும், பள்ளி கட்டணம் தாமதமாக செலுத்தினாலும் மாணவர்கள் மீது எந்த நடவடிக்கையும் கூடாது என்றும் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.