Heat wave Alert in tamilnadu [file image]
Weather Update: தமிழகத்தில் மே 1ம் தேதி முதல் வெப்ப அலை வீசக்கூடும் என தனியார் வானிலை ஆய்வாளர் தகவல் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கடந்த சில வாரங்களாகவே இதுவரை இல்லாத அளவில் வெயில் சுட்டெரித்து வருகிறது. அதில் குறிப்பாக சில இடங்களில் உட்சபட்ச வெப்பநிலையும் பதிவாகியுள்ளது. இதனால் முதியவர்கள் மற்றும் குழந்தைகள் என பலரும் சிரமத்துக்குள்ளாகி உள்ளனர்.
அக்னீ நட்சத்திரம் இன்னும் ஆரம்பம் ஆகாமலே தமிழகத்தில் தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் தமிழகத்தில் மே 1ம் தேதி முதல் வெப்ப அலை வீசக்கூடும் என தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தகவல் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவரது எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மே 1 முதல் 4 வரை தமிழகத்தின் வட உள்மாவட்டங்களில் வெப்ப அலை உச்சத்தை தொட வாய்ப்பு உள்ளது. அதில் குறிப்பாக வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ஈரோடு, சேலம், நாமக்கல், திருச்சி, கரூர் ஆகிய மாவட்டங்களில் வெப்ப அலையானது உச்சத்தை எட்டும் என எதிர்பார்ப்பதாக கூறியுள்ளார்.
மேலும், மே 5ம் தேதி முதல் தமிழகத்தின் உள்மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும். அதன்படி, ஈரோடு, சேலம், தருமபுரி போன்ற உள்மாவட்டங்களில் மே முதல் வார இறுதியில் இருந்து இரண்டாவது வாரம் வரை மழை பெய்யும் என்றும் பெங்களுருவில் அதேசமயத்தில் மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவித்துள்ளார்.
டெல்லி : ஐபிஎல் தொடரின் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்றது.…
நெல்லை : 2023ஆம் ஆண்டு நாங்குநேரியில் தாக்குதலுக்குள்ளான பட்டியலின மாணவன் சின்னதுரை மீது, மர்ம நபர்கள் மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.…
டெல்லி : ஐபிஎல் தொடரின் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்று…
சென்னை : கடந்த மார்ச் 7ம் தேதி தவெக சார்பில் சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடத்தப்பட்ட இப்தார் நோன்பு…
டெல்லி : ஐபிஎல் 2025 -இன் 3-2வது போட்டி இன்று டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையே…
சென்னை : அஜித் -ஆதிக் கூட்டணியில் வெளியான 'குட் பேட் அக்லி' படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அஜித்தின்…