கொரோனா சிகிச்சைக்கு அரசு நிர்ணயித்துள்ள கட்டணத்தை விட கூடுதலாக வசூலிக்க கூடாது என்றும் மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தனியார் மருத்துவமனைகளுக்கு சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்,தமிழக அரசு கொரோனா நோய் காலத்தில் மக்கள் அனைவரும் பயன்பெறும் வகையில் பல்வேறு நடவடிக்கைளை எடுத்து வருகிறது.தனியார் மருத்துவமனைகள் அரசுடன் இணைந்து கொரோனா நோய்க்கான சிகிச்சைகளை மக்களுக்கு வழங்கிட அனுமதி அளித்து வருகிறது.சிகிச்சைகள் தொடர்பான உரிய நெறிமுறைகள் மற்றும் வழிகாட்டி நடைமுறைகளை அவ்வப்போது வழங்கி வருகிறது.இந்நிலையில் பொதுமக்கள் நோய் சிகிச்சை காரணமாக அதிக நிதிச்சுமைக்கு ஆளாகாதவண்ணம் அரசாணை எண் .240 , சுகாதாரம் மற்றும் குடும்ப நலம் துறை,நாள் 5.6.2020 -ன் மூலம் அதிகபட்ச கட்டணங்கள் நிர்ணயித்து ஆணை வழங்கியுள்ளது.கொரோனா நோய்க்கு வழங்கப்படும் சிகிச்சைகளையும் அதற்காக தனியார் மருத்துவமனைகளில் வசூலிக்கப்படும் கட்டணங்கள் குறித்தும் மக்கள் நல்வாழ்வு துறையினரால் கண்காணிப்பு மற்றும் திடீர் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள Bewell மருத்துமனையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில் நோயாளி ஒருவருக்கு 19 நாட்களுக்கான சிகிச்சைக்கு ரூ.12,20,000 வசூலிக்கப்பட்ட விவரம் உறுதி செய்யப்பட்டது.மேலும் தனியரது சிகிச்சைக்கு அரசு வழங்கிய நெறிமுறைகளின் கூடுதல் சிறப்பு மருந்துகள் ஏதும் பயன்படுத்தவில்லை.கூடுதல் கட்டணம் வசூல் செய்தது உறுதி செய்யப்பட்ட நிலையில் Bewell மருத்துவமனைக்கு கொரோனா நோய் சிகிச்சைக்காக அளிக்கப்பட்ட அரசு அனுமதி தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.கொரோனா சிகிச்சை வழங்கும் அனைத்து தனியார் மருத்துவமனைகளிலும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கட்டணவிவரம் தெளிவாக பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட வேண்டும் என மக்கள் நல்வாழ்வு துறையால் ஏற்கனவே உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது .தனியார் மருத்துவமனைகள் அரசு நிர்ணயித்துள்ள கட்டணத்தைவிட கூடுதலாக வசூலிப்பதாக புகார் பெறப்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மீண்டும் வலியுறுத்தப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி : இந்திய கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சனின் அப்பா விஷ்வநாத், தன் மகனின் கிரிக்கெட் வாழ்க்கையில் முன்னாள் இந்திய…
சென்னை : தமிழகத்தில் தினமும் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் பல மாவட்டங்களில் மின்தடை ஏற்படுவது வழக்கம். எனவே, நவம்பர்…
கேரளா : ஏப்ரல் மாதம் வயநாடு தொகுதியில் நடைபெற்ற தேர்தலில் வென்ற ராகுல் காந்தி, வயாநாடு எம்பி பதவியை ராஜினாமா…
சென்னை : கிண்டி அரசு மருத்துவமனையில் விக்னேஷ் என்ற இளைஞர் புற்றுநோய் மருத்துவரான பாலாஜியை கத்தியால் குத்திய சம்பவம் பெரும்…
சென்னை : கிண்டி அரசு மருத்துவமனையில் இன்று காலை நடந்த கத்திக்குத்து சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிண்டி மருத்துவமனையில்…
சென்னை: சென்னையில் மேலும் ஒரு டாக்டர் மீது தாக்குதல் நடைபெற்றுள்ளது. கிண்டி அரசு ஹாஸ்பிடலில் இன்று காலை டாக்டர் பாலாஜி…