தமிழ்நாட்டில் புதிய 11 நகரங்களில் தனியார் FM சேவை.. மத்திய அமைச்சரவை ஒப்புதல்.!
டெல்லி : 234 புதிய நகரங்களுக்கான தனியார் எஃப்எம் ரேடியோவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இந்தியாவில் 234 புதிய நகரங்களில் தனியார் FM ரேடியோ சேவைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அதில், தமிழ்நாட்டில் குன்னூர், திண்டுக்கல், காரைக்குடி, கரூர், கன்னியாகுமரி உள்ளிட்ட 11 நகரங்களில் ஒப்புதல் அளிக்கப்பட்டள்ளது.
மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் இது பற்றி கூறுகையில், எஃப்எம் சேனலின் வருடாந்திர உரிமக் கட்டணத்தை (ஏஎல்எஃப்) ஜிஎஸ்டி தவிர்த்து மொத்த வருவாயில் நான்கு சதவீதமாக வசூலிக்கும் திட்டத்திற்கும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது என்றார். இது 234 புதிய நகரங்களுக்கும் பொருந்தும்.
பிரைவேட் எஃப்எம் ரேடியோ ஃபேஸ் ஐல் பாலிசியின் கீழ், 234 புதிய நகரங்களில் ரூ.784.87 கோடி கையிருப்பு விலையுடன் 730 சேனல்களுக்கான ஏறுவரிசை மின்-ஏலத்தின் 3-வது தொகுதியை நடத்துவதற்கான முன்மொழிவுக்கும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த திட்டம் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இது புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குவதற்கும், உள்ளூர் பேச்சுவழக்கு மற்றும் கலாச்சாரத்தை மேம்படுத்துவதற்கும், ‘உள்ளூர்களுக்கான குரல்’ முயற்சிகளுக்கும் வழிவகுக்கும் என மத்திய அரசு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.