இந்த நான்கு மாவட்டங்களில் தனியார் நிறுவனங்கள் 100 சதவீத பணியாளர்களுடன் செயல்பட அனுமதி…!
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் அனைத்து தனியார் நிறுவனங்கள் 100 சதவீத பணியாளர்களுடன் செயல்பட அனுமதி.
தமிழகம் முழுவதும் வருகின்ற 28 ஆம் தேதியுடன் ஊரடங்கு முடிவடையவுள்ள நிலையில் கூடுதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை ஜூலை 5 ஆம் தேதி வரை நீட்டித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்நிலையில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள செயல்பாடுகளுக்கான நேர தளர்வுகளுடன் கூடுதலாக கீழ்க்கண்ட செயல்பாடுகளுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது.
அதன்படி,
- அனைத்து தனியார் நிறுவனங்கள் 100 சதவீத பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்.
- அனைத்து துணிக்கடைகள் குளிர்சாதன வசதி இல்லாமலும் ஒரே நேரத்தில் 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் காலை 9.00 மணி முதல் மாலை 7:00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.
- • அனைத்து நகைக்கடைகள், குளிர் வசதி இல்லாமலும் ஒரு நேரத்தில் 50% வாடிக்கையாளர்களுடன் காலை 9.00 மணி முதல் மாலை 7.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.
- வணிக வளாகங்கள் (Shapping Complex / Malls) காலை 9.00 மணி முதல் மாலை 7.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும். எனினும், வணிக வளாகங்களில் உள்ள உணவகங்களில் பார்சல் உணவு மட்டும் அனுமதிக்கப்படும். திரையரங்குகள் மற்றும் விளையாட்டுக் கூடங்களுக்கு அனுமதி இல்லை.
- கோயில்கள், மகுதிகள், தேவாலயங்கள், தர்காக்கள் உள்ளிட்ட அனைத்து மத வழிபாட்டு தலங்களும் நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி செயல்பட அனுமதிக்கப்படும். அர்ச்சனை, திருவிழாக்கள் மற்றும் குடமுழுக்கு நடத்த அனுமதி இல்லை.
- காலை 6.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை விளையாட்டு பயிற்சி குழுமங்கள் இயங்கவும், பார்வையாளர்கள் இல்லாமல் திறந்த வெளியில் விளையாட்டுப் போட்டிகள் நடத்தவும், அனுமதிக்கப்படும்.