கூடுதல் கட்டணம் வசூலித்த தனியார் பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது…!போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்
கூடுதல் கட்டணம் வசூலித்த தனியார் பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையம் மற்றும் ஆம்னி பேருந்து நிலையங்களில் ஆய்வு நடத்தினார்.அதன் பின்னர் அவர் கூறுகையில், கூடுதல் கட்டணம் வசூலித்த தனியார் பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பயணிகளின் புகார்களுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.அதேபோல் தீபாவளியையொட்டி இதுவரை 3 லட்சத்துக்கும் அதிகமானோர் பேருந்துகளில் பயணம் செய்துள்ளனர்.இதுவரை 2,690 பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளன என்றும் போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.