பொங்கல் திருநாளைக் கொண்டாட சொந்த ஊர் செல்வோரின் வசதிக்காக 11,983 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக அரசு அறிவித்து இருந்தது. ஆனால் போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தம் காரணமாக கோயம்பேட்டில் அமைக்கப்பட்ட சிறப்பு பேருந்துகளுக்கான கவுண்ட்டரில் முன்பதிவு இன்னும் தொடங்கப்படவில்லை. இதன் காரணமாக சிறப்பு பேருந்துகள் இயங்குமா? என்று மக்கள் மனதில் கேள்வி எழுந்துள்ளது.
எனவே பொங்கலைக் கொண்டாட வெளியூர் செல்வோரில் பெரும்பாலானோர் தனியார் பேருந்துகளையே நாடும் நிலை ஏற்பட்டுள்ளது. இதைப் பயன்படுத்திக் கொண்டு, தனியார் பேருந்து நிறுவனங்கள், பயணிகளின் பணத்தை சுரண்டி கொள்ளை லாபம் பார்க்க முயற்சிப்பதாகப் புகார் எழுந்துள்ளது.
சென்னையில் இருந்து திருச்சிக்குச் செல்ல 1,150 ரூபாய் என டிக்கெட் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மதுரைக்கு 1,300 ரூபாய் வரை கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதுவும் இன்று முன்பதிவு செய்தால் மட்டுமே இந்த தொகை. நாளையோ அல்லது நாளை மறுநாளோ முன் பதிவு செய்யச் சென்றால், கட்டணம் 2,000 ரூபாயை தாண்டி விடும் என்று முன்பதிவு மைய ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
பொங்கல் பண்டிகையின் போது வழக்கமாக கட்டணம் அதிகரிக்கப்படும் என்று கூறும் தனியார் பேருந்து முன்பதிவு மைய ஊழியர்கள், தற்போது நடக்கும் போக்குவரத்து ஊழியர்களின் போராட்டம் தங்களுக்கு பிளஸ் பாயிண்ட் என்று தெரிவிக்கின்றனர்.
கட்டணம் எக்குதப்பாக இருந்தாலும், பொங்கலுக்கு ஊருக்குச் செல்ல வேண்டுமே என்கிற ஏக்கத்தில் பலரும் வேறு வழியின்றி தனியார் பேருந்துகளில் டிக்கெட்டுகளை புக்கிங் செய்து வருகின்றனர். ஆனால் அரசுப் பேருந்துகளை நம்பி இருந்தவர்கள், தனியார் பேருந்துகளுக்கு இவ்வளவு கட்டணம் கொடுகக் வேண்டுமா என்று எண்ணி, கதி கலங்கி நிற்கின்றனர்.
source: dinasuvadu.com
புதுச்சேரி : பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) புத்தாண்டு சிறப்பு பொதுக்குழு கூட்டம் இன்று (டிசம்பர் 28) புதுச்சேரி நாவற்குளம் நெடுஞ்சாலையில்,…
மெல்போர்ன் : சினிமா படத்தில் வரும் "இங்க வாய்ப்புன்றது நம்முளுக்கு அவ்ளோ சீக்கிரம் கிடைக்கிறது இல்ல இது நம்ப ஆட்டம்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ள நிலையில், இந்த சம்பவம்…
சென்னை : இன்று நடைபெற்ற பாமக பொதுக்குழு அந்த கூட்டத்தில் இளைஞரணி தலைவர் நியமனம் செய்யப்படுவது தொடர்பாக ராமதாஸ்- அன்புமணி…
விழுப்புரம் : இன்று பாமக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி மற்றும் பாமக…
சென்னை: அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம்…