கொரோனா தொற்று மற்றும் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் கடந்த இரண்டு ஆண்டுகளாக விவசாயி தனியார் வங்கியில் வாங்கிய கடனை திருப்பி செலுத்தவில்லை எனும் காரணத்திற்காக அவரது வீட்டை பூட்டி சீல் வைத்துள்ளது தனியார் வங்கி நிறுவனம்.
விவசாயிகளின் போராட்டமும் விவசாயிகளின் அன்றாட வாழ்க்கை முறையும் தான் இந்தியாவில் தற்போது அதிக அளவில் பேசப்படும் பொருளாக இருந்து வருகிறது. மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய வேளாண் சட்டங்களின் காரணமாக டெல்லியில் விவசாயிகள் பெரும் போராட்டத்தை கடந்த மூன்று மாதங்களாக நடத்தி வருகின்றனர். இந்நிலையில், தமிழகத்தில் விவசாயிகளின் கடன் முழுவதும் தள்ளுபடி செய்யப்பட்டது என அறிவித்துள்ள நிலையில் தற்போது விவசாயி ஒருவர் கடன் செலுத்தவில்லை என்பதற்காக தெருவில் ஒரு வாரமாக தன் மகள்களுடன் மாற்று துணி கூட இல்லாமல் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே தனது இரு மகள்களுடன் வசித்து வரக்கூடிய விவசாயி ஒருவர் தனியார் வங்கி ஒன்றில் வாங்கிய கடனை கொரோனா பிரச்சனை மற்றும் தனது உடல்நிலை சரியில்லாத காரணத்தால் திருப்பி செலுத்தாமல் இருந்துள்ளார்.
இந்நிலையில் பலமுறை தங்களிடம் வாங்கிய கடனை செலுத்துமாறு வங்கி நிர்வாகம் கூறியும் அவர் செலுத்தாமல் இருந்ததால் கடந்த வாரம் விவசாயின் வீட்டிற்கு சென்ற தனியார் வங்கி ஊழியர்கள் அவரது வீட்டை பூட்டி சீல் வைத்துள்ளனர். இந்நிலையில் தனது இரு மகள்கள் மற்றும் மனைவியுடன் பூட்டிய வீட்டின் முன்பு அந்த விவசாயி மாற்று துணி கூட இல்லாமல் ஒரு வாரமாக அமர்ந்து இருக்கிறாராம். தமிழகத்தில் விவசாய கடன் ரத்து செய்யப்பட்டுள்ளது என்று கூறப்படும் நிலையில், மதுரையில் உள்ள விவசாயிக்கு ஏற்பட்டுள்ள இந்த நிலை பலரையும் கேள்வி எழுப்ப வைத்துள்ளது. மேலும் அரசு இந்தப் பிரச்சினையில் உடனடியாக தலையிட்டு தீர்வு காண வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் பலர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
ஜார்க்கண்ட் : மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் சட்டப் பேரவைத் தேர்தல்களில் பதிவான வாக்குகள் இன்று காலை 8மணி முதலே எண்ணப்பட்டு…
மேற்கு வங்கம் : மேற்குவங்கத்தில நடந்த இடைத்தேர்தலில் 6 தொகுதிகளிலும் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. முன்னதாக…
மும்பை : மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு அறிவிக்கப்பட்டு வந்த நிலையில்,…
பீகார் : மாநிலத்தில் பெலகஞ்ச், இமாம்கஞ்ச், ராம்கர் மற்றும் தராரி ஆகிய நான்கு தொகுதிகளின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. தராரி…
கேரளா : கேரளாவின் வயநாடு எம்.பி. பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்ததை அடுத்து, அங்கு அவரது தங்கை கேரளா…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு பிரமாண்டமாகக் கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம்…