புழல் மத்திய சிறை’ – கடந்த சில நாள்களாகவே சிக்கலில் சிக்கிக்கொண்டிருக்கும் சிறைச்சாலையாக இது மாறியுள்ளது. போதைக் கடத்தல் கும்பல் சிறைக்குள் சொகுசாக இருக்கும் புகைப்படங்கள் வெளியான பிறகு, கடந்த சில நாள்களாகவே சிறைக்குள் அதிரடியாகச் சோதனைகள் நடைபெற்று வருகிறது. கடந்த வாரத்தில் மட்டும் இருபதுக்கும் மேற்பட்ட டிவி-கள், கட்டில்கள் உள்ளிட்ட பொருள்கள் பறிமுதல் செய்யபட்டன.கிட்டதட்ட நட்சத்திர விடுதிகளுக்கு இணையாகச் சிறைவாசிகள் சொகுசு வாழ்க்கை வாழ்ந்துவந்தது கண்டறிந்த சிறைத்துறை உயர் அதிகாரிகள் இதைத் தடுக்க தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
புழல் சிறையில் உள்ள அறைகளுக்கு பூட்டுகளுக்குப் பதிலாக வெளிநாட்டு சிறைகளில் இருப்பது போன்ற டிஜிட்டல லாக் சிஸ்டமும் முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமராக்களையும் பொறுத்தலாம் என்று முடிவாகியுள்ளது. கண்காணிப்புக் கேமராவை சிறைத்துறையின் தலைமையிடத்திலிருந்தே பார்க்கும் வகையில் இந்தத் திட்டத்தைக் கொண்டு வர முடிவாகியுள்ளதாகச் சொல்கிறார்கள் சிறைத்துறையினர். புழல் சிறையில் இந்தப் புதிய மாற்றங்களைக் கொண்டு வர அரசிடம் அனுமதி கேட்டு, அதற்கான தொகையை ஒதுக்கீடு செய்ய கோரிக்கை வைக்க உள்ளது சிறைத்துறை. ஆசியாவில் மிகப்பெரிய சிறையாகக் கருதப்படும் புழல் சிறை இனி புதிய மாற்றத்தைக் காணப்போகிறது.
DINASUVADU
சென்னை : கடந்த சில நாட்களாக உச்சம் தொட்டு வந்த தங்கத்தின் விலை தற்போது மீண்டும் சற்று உயர்ந்துள்ளது. தொடர்ந்து…
கொழும்பு : இலங்கையில் நிலவிய மோசமான பொருளாதர சூழலை அடுத்து ஜனாதிபதி, பிரதமர் பதவி விலகிய நிலையில், நாட்டின் புதிய…
சென்னை : நடைபெற்ற இலங்கை புதிய நாடாளுமன்றத் தேர்தலில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் அதிபர் அனுரகுமார திஸாநாயக்க கூட்டணி…
சென்னை : ஆளும் திமுக அமைச்சரவையில் மின்சாரத்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை அமைச்சராக பொறுப்பில் இருப்பவர் செந்தில் பாலாஜி. இவர்…
வெல்லிங்டன் : நியூஸிலாந்தில் 22 வயதான இளம் வயது பெண் எம்பி பார்லிமென்டில் வித்தியாசமான முறையில் மசோதாவை எதிர்த்து, தனது…
வாஷிங்டன் : சமூக வலைத்தளமான பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் ஆகியவை 'மெட்டா' நிறுவனத்தின் கீழ் இயங்கி வருகிறது. இவற்றை மார்க்…