“கதிகலங்க போகும் கைதிகள்” மாறுகிறது சிறைச்சாலை..!!

Default Image

புழல் மத்திய சிறை’ – கடந்த சில நாள்களாகவே சிக்கலில் சிக்கிக்கொண்டிருக்கும் சிறைச்சாலையாக இது மாறியுள்ளது. போதைக் கடத்தல் கும்பல் சிறைக்குள் சொகுசாக இருக்கும் புகைப்படங்கள் வெளியான பிறகு, கடந்த சில நாள்களாகவே சிறைக்குள் அதிரடியாகச் சோதனைகள் நடைபெற்று வருகிறது. கடந்த வாரத்தில் மட்டும் இருபதுக்கும் மேற்பட்ட டிவி-கள், கட்டில்கள் உள்ளிட்ட பொருள்கள் பறிமுதல் செய்யபட்டன.கிட்டதட்ட நட்சத்திர விடுதிகளுக்கு இணையாகச் சிறைவாசிகள் சொகுசு வாழ்க்கை வாழ்ந்துவந்தது கண்டறிந்த சிறைத்துறை உயர் அதிகாரிகள் இதைத் தடுக்க தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
Related imageசில நாள்களாகவே சிறைத்துறை ஏ.டி.ஜி.பி அசுதோஷ் சுக்லா புழல் சிறைக்கு விசிட் செய்து நிலைமைகளை நேரடியாக ஆய்வு செய்துவருகிறார். நேற்று புழல் சிறையில் முக்கிய அதிகாரிகளுடன் ஏ.டி.ஜி.பி ஆலோசனை நடத்தியுள்ளார். சிறைக்குள் போதிய காவல் வசதி இல்லாமல் இருப்பது, அதிகாரிகளையே மிரட்டும் அளவுக்கு சிறைவாசிகள் சிறைக்குள் கூட்டணி வைத்திருப்பதாலும் பல தவறுகளைத் தடுக்க முடியாத நிலை உள்ளது. இதையெல்லாம் அந்தக் கூட்டத்தில் விவாதித்துள்ளார். இதன் பிறகு அந்த ஆலோசனையில் புழல் சிறையின் பாதுகாப்பை அதிகப்படுத்த நவீன தொழில்நுட்பங்களை சிறைக்குள் கொண்டுவரலாம் என்று முடிவாகியுள்ளது.

புழல் சிறையில் உள்ள அறைகளுக்கு பூட்டுகளுக்குப் பதிலாக வெளிநாட்டு சிறைகளில் இருப்பது போன்ற டிஜிட்டல லாக் சிஸ்டமும் முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமராக்களையும் பொறுத்தலாம் என்று முடிவாகியுள்ளது. கண்காணிப்புக் கேமராவை சிறைத்துறையின் தலைமையிடத்திலிருந்தே பார்க்கும் வகையில் இந்தத் திட்டத்தைக் கொண்டு வர முடிவாகியுள்ளதாகச் சொல்கிறார்கள் சிறைத்துறையினர். புழல் சிறையில் இந்தப் புதிய மாற்றங்களைக் கொண்டு வர அரசிடம் அனுமதி கேட்டு, அதற்கான தொகையை ஒதுக்கீடு செய்ய கோரிக்கை வைக்க உள்ளது சிறைத்துறை. ஆசியாவில் மிகப்பெரிய சிறையாகக் கருதப்படும் புழல் சிறை இனி புதிய மாற்றத்தைக் காணப்போகிறது.

DINASUVADU 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்