தென்காசி மாவட்டத்திலுள்ள ஆய்குடியை சேர்ந்த சுப்பிரமணியன் என்பவருடைய மகன் பாரத் முருகன் (28) இவரை ஆய்க்குடி காவல்துறையினர் அடிதடி மற்றும் வழிப்பறி போன்ற வழக்குகளில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 14-ம் தேதி சிறையில் அடைத்தனர். மேலும் , கடந்த ஆண்டு செப்டம்பர் மாதமும் குண்டர் தடுப்பு சட்டத்திலும் இவர் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில் நேற்று காலை 9 மணிக்கு பாரத் முருகனிற்கு திடீரென வலிப்பு நோய் ஏற்பட்டது.சிறை மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்தனர்.இதையெடுத்து மேல் சிகிச்சைக்காக காலை 11 மணியளவில் நெல்லையிலுள்ள அரசு மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
ஆனால் அங்கு சிறிது நேரம் சிகிச்சை பெற்ற நிலையில் திடீரென உயிரிழந்தார். பாரத் முருகனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இன்று மாஜிஸ்திரேட் விசாரணை முடிந்த பிறகு பாரத் முருகனின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்படும் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
திருவண்ணாமலை -தமிழ் மாதங்களில் எட்டாவது மாதமாக வரக்கூடியது தான் கார்த்திகை மாதம் .இந்த கார்த்திகை மாதத்தில் அனைவரும் வீடுகளில் விளக்கேற்றி…
டெல்லி : ஐபிஎல் போட்டிகளில் இந்தியாவின் அதிரடி ஆட்டக்காரர் யுவராஜ் சிங் வீரராக விளையாடவில்லை என்றாலும் அணிக்குப் பயிற்சியாளராக வருவாரா?…
ஜார்க்கண்ட் : காங்கிரஸ் எம்பியும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தியின் ஹெலிகாப்டர் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டின் (ஏடிசி) அனுமதி…
சென்னை -திருக்கார்த்திகை ஸ்பெஷல் அப்பம் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; வெல்லம் =முக்கால்…
சென்னை : சிவகார்த்திகேயன் நடிப்பில் அமரன் படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியான நிலையில், வெளியாகி 15 நாட்களைக் கடந்து…
சென்னை : நடிகர் ஜெயம் ரவிக்கும் - ஆர்த்தி என்பவருக்கும் கடந்த 2009இல் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 2 குழந்தைகள்…