#BREAKING: சிறை பணியாளர்களுக்கு தடுப்பூசி போட உத்தரவு..!
சிறைத்துறையினரை முன்களப் பணியாளராக கருதி கொரோனா தடுப்பூசி செலுத்த முன்னுரிமை வழங்க வேண்டும் என உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு உத்தரவு.
கொரோனா சூழலில் சிறைக் கைதிகளுக்கு பரோல், மருத்துவர் தூய்மைப்பணியாளர்கள் காலியிடங்கள் நிரப்புவது குறித்து தாமாக முன்வந்து உயர்நீதிமன்றம் விசாரிக்கிறது. இந்நிலையில், சிறைப்பணியாளர்களை முன்களப் பணியாளராக கருதி முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி போட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சிறைப் பணியாளர்களுக்கு தடுப்பூசி போடுமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், தொற்று அதிகமானால் சிறைக்கைதிகளை பரோலில் விடுப்பு விடுவிப்பது தொடர்பாக அரசு முடிவெடுக்க வேண்டும். நீதிமன்ற உத்தரவுக்கு காத்திருக்காமல் பரோல் விடுப்பு பற்றி உயர்நிலைக்குழு முடிவெடுக்க நீதிபதிகள் அறிவுரை வழங்கினார்.
தமிழ்நாட்டில் 13,854 கைதிகளுக்கு முதல் தவணை தடுப்பூசி போடப்பட்டுள்ளதாகவும், சிறைப் பணியாளர்கள் 700 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளதாகவும் உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.