செங்கல்பட்டு அருகே சிறைக்காவலர் வெட்டி கொலை ..!
செங்கல்பட்டு பாலூர் அடுத்த பழையசீவரம் அருகே சிறைக்காவலர் இன்பரசு வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார்.
சிறைக்காவலர் இன்பரசு நேற்று தனது சொந்த ஊரான பழையசீவரத்திற்கு வந்துள்ளார். இன்று இன்பரசு பணிக்கு செல்லும் போது நண்பர்கள் அழைப்பதாக கூறி போன் வந்துள்ளது.
பின்னர், இன்பரசு தனது இருசக்கர வாகனத்தில் சற்று தூரம் சென்றவுடன், 2 இரு சக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் அவரை மடக்கி சரமாரியாக வெட்டி உள்ளனர். இதில், படுகாயம் அடைந்த இன்பரசு சமப்வ இடத்திலே உயிரிழந்தார்.
பின்னர், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இன்பராஜ் உடலை கைப்பற்றி செங்கல்பட்டு அரசு மருத்துவமணிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். சிறைக்காவலர் இன்பரசு வெட்டிக்கொலை செய்த மர்மநபர்கள் குறித்து பாலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.