கைலாசா என்ற தனி நாட்டை உருவாக்கி வசித்து வரும் நித்யானந்தாவிடம், அங்கு ஓட்டல் திறப்பதற்கு அனுமதி கோரிய தமிழகத்தை சேர்ந்த நபருக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்று நித்தியானந்தா பதில் தெரிவித்துள்ளார்.
சர்ச்சைகளுக்கு பெயர்போன நித்தியானந்தா கைலாசா என்ற நாட்டை உருவாக்கி இருப்பதாக தலைமறைவாக இருந்துகொண்டு தொடர்ந்து வீடியோ வெளியிட்டு வரும் அவர், தனது நாட்டுக்கான தனி கொடி, ரிசர்வ் பேங்க், கரன்சிகள் என அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். நேற்று விநாயகர் சதுர்த்தி அன்று கைலாச நாட்டில் வர்த்தகம் செய்ய 5 வகையான நாணயங்களை வெளியிட்டார். இந்து மதத்தை பின்பற்றும் 56 நாடுகளுடன் வர்த்தகம் செய்வோம் என அறிவித்துள்ளார். இந்த பொற்காசு 11.6638038 கிராம் என குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்நிலையில், கைலாசா என்ற தனி நாட்டை உருவாக்கி வசித்து வரும் நித்யானந்தாவிடம், அங்கு ஓட்டல் திறப்பதற்கு அனுமதி கேட்டு மதுரையை சேர்ந்த டெம்பிள் சிட்டி குமார் என்பவர் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், கைலாசா நாட்டில் ஓட்டல் துவங்குவதற்கு அனுமதி கோரியுள்ளார். உங்களின் பதிலுக்காக காத்திருக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில், இந்த கடிதத்துக்கு பதில் அளிக்கும் விதமாக நித்தியானந்தா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ஹோட்டல் துவங்குவதற்கு தனது நிர்வாகிகளிடம் முன்னுரிமை அளிக்க செய்வதாக வாக்குறுதி கொடுத்துள்ளார்.
சென்னை : அஜித்குமார் நடிப்பையும் தாண்டி பைக் மற்றும் கார் ரேசிங்கில் அதிகம் ஆர்வம் கொண்ட ஒருவர். ஒரு பக்கம் படங்களில்…
சென்னை : அதிமுக பாஜகவுடன் கூட்டணி அமைத்த காரணத்தால் SDPI கட்சி அதிமுக கூட்டணியில் இருந்து விலகுவதாக அக்கட்சி பொதுச்செயலாளர்…
அமெரிக்கா : இந்திய விண்வெளி ஆய்வில் புதிய அத்தியாயத்தை எழுத உள்ளது. ஏனென்றால், சுபான்ஷு சுக்லாவின் சர்வதேச விண்வெளி நிலைய…
சென்னை : 2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்காக அதிமுகவுடன் அண்மையில் பாஜக கூட்டணி அமைத்தது. பாஜக மூத்த தலைவரும், மத்திய…
டெல்லி : கடந்த பிப்ரவரி மாதம் மேற்கொள்ளப்பட்ட அமெரிக்க பயணத்தின் போது தொழிலதிபர் எலான் மஸ்க்கை பிரதமர் நரேந்திர மோடி…
சென்னை : தமிழ்நாட்டில் முதல் முறையாக ஏசி பெட்டிகள் கொண்ட முதல் மின்சார ரயில் சேவை இன்று காலை 7…