மலை வாழ் மக்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு தடுப்பூசி செலுத்த முன்னுரிமை – அமைச்சர் மா.சுப்பிரமணியன்
தமிழகத்தில் மட்டும்தான் மாற்றுத்திறனாளிகளுக்கு வீடுகளுக்கு சென்றே தடுப்பூசி செலுத்தப்பட்டிருக்கிறது என மருத்துவத்துறை அமைச்சர் தகவல்.
தமிழகம் முழுவதும் இன்று 7வது மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. சென்னை அடையாறு கஸ்தூரிபாய் நகரில் நடைபெறும் மெகா தடுப்பூசி முகாமை ஆய்வு மேற்கொண்ட பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், 7-வது தடுப்பூசி முகாம் 50,000 இடங்களில் நடைபெறுகிறது. தற்போது 59 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன.
இதுவரை தமிழ்நாடு முழுவதும் 5,73,901 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. நவம்பர் மாதத்தில் மத்திய அரசிடம் இருந்து 1.40 கோடி லட்சம் தடுப்பூசிகள் வர உள்ளன. தமிழகத்தில் மட்டும்தான் மாற்றுத்திறனாளிகளுக்கு வீடுகளுக்கு சென்றே தடுப்பூசி செலுத்தப்பட்டிருக்கிறது. மலை வாழ் மக்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு தடுப்பூசி செலுத்த முன்னுரிமை வழங்கப்படுகிறது என்று தெரிவித்தார்.