தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை – அரசாணை வெளியீடு

Default Image

தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தமிழக அரசு அதற்கான அரசாணையை வெளியிட்டுள்ளது. 

2021-2022-ஆம் ஆண்டிற்கான ஆளுநர் உரையில், 21.06.2021 அன்று, தமிழ்நாட்டு மக்களுக்கு குறிப்பாக தமிழ்வழியில் பயின்றவர்களுக்கும், அரசுப் பள்ளிகளில் பயின்றவர்களுக்கும். அரசுப் பதவிகளுக்கான வேலைவாய்ப்பில் முன்னுரிமை கொடுக்கப்படுவதை இந்த அரசு உறுதி செய்யும் என அறிவித்திருந்தார்.

அதனை தொடர்ந்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு கடந்த ஜூன் 21ஆம் தேதி நடந்த சட்டமன்றக் கூட்டத் தொடரில் ஆளுநர் உரையாற்றினார். அப்போது, “தமிழ்நாட்டு மக்களுக்கு, குறிப்பாக தமிழ் வழியில் பயின்றவர்களுக்கும், அரசு பள்ளியில் பயின்றவர்களுக்கும் அரசு பதவிகளுக்கான வேலைவாய்ப்பில் முன்னுரிமை கொடுக்கப்படுவதை அரசு உறுதி செய்யும்” என்று அறிவித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து நடந்த மானியக் கோரிக்கை மீதான கூட்டத் தொடரில் உரையாற்றிய மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், கொரோனா தொற்றால் பெற்றோர் இருவரையும் இழந்த இளைஞர்கள், முதல் தலைமுறை பட்டதாரிகள், தமிழக அரசு பள்ளிகளில் தமிழ்மொழியில் பயின்ற நபர்களுக்கு அரசுப் பணியிடங்களில் முன்னுரிமை அளிக்கப்படும் என்று அறிவித்திருந்தார்.

அதன்படி தமிழக அரசு தற்போது, கொரோனா தொற்றால் பெற்றோர் இருவரையும் இழந்த இளைஞர்கள், முதல் தலைமுறை பட்டதாரிகள் மற்றும் தமிழக அரசுப் பள்ளிகளில் தமிழ் மொழியில் பயின்ற நபர்கள் ஆகியோருக்கு வேலைவாய்ப்பகங்கள் வழியாக நிரப்பப்படுகின்ற அரசுப் பணியிடங்களில் முன்னுரிமை வழங்குதல் மற்றும் வேலைவாய்ப்பகங்கள் மூலம் மேற்கொள்ளப்படும் பணி நியமனங்களில் பின்பற்றப்பட்டு வரும் முன்னுரிமை முறையினை மறுசீரமைப்பு செய்தல் உள்ளிட்ட ஆணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

இதேபோல போரில் உடல் தகுதியை இழந்த ராணுவத்தினர், கணவனை இழந்தவர்கள், சாதி மறுப்பு திருமண தம்பதியர் ஆகியோருக்கும் சுழற்சி முறையில் இட ஒதுக்கீடு அமலாகிறது. ஒவ்வொரு பிரிவுக்கும் வரிசை எண்கள் ஒதுக்கப்பட்டு, ஒவ்வோர் முறையும் சுழற்சி முறையில் இட ஒதுக்கீடு அமலாகவுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்