இல்லம் தேடி கல்வி குறித்து சில தலைவர்கள் எச்சரித்திருப்பதை ஏற்றுக் கொள்கிறோம் என அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி.
பள்ளி மாணவர்களின் கற்றல் இடைவெளியை சரிசெய்யும் விதமாக மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு இல்லம் தேடி கல்வி திட்டத்தை கொண்டு வந்துள்ளது. அதன்படி, இல்லம் தேடி கல்வி திட்டத்தை நேற்று விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இந்த திட்டத்திற்காக 200 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இன்று செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, முதல்கட்டமாக 12 மாவட்டங்களில் இல்லம் தேடி கல்வி திட்டம் செயல்படுத்தப்படுகிறது என்றும் இடைநிற்றலை குறைப்பதற்கான வழிவகையாக இல்லம் தேடி கல்வி திட்டம் அமையும் எனவும் தெரிவித்தார்.
முற்றிலும் மாநில அரசின் நிதியில் இத்திட்டம் செய்லபடுகிறது. எச்சரிக்கை உணர்வுடன்தான் தன்னார்வலர்கள் தேர்தெடுக்கப்படுகின்றன. தன்னார்வலர்கள் தேர்வில் பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என கூறினார்.
சில கட்சி தலைவர்கள் கூறியுள்ள எச்சரிக்கை உணர்வுடன்தான் இந்த திட்டத்தை அரசு செயல்படுத்தி வருகிறது என்று இல்லம் தேடி கல்வி திட்டம் தொடர்பாக எழுந்துள்ள விமர்சனங்களுக்கு அமைச்சர் விளக்கமளித்துள்ளார்.
மேலும், 1-ஆம் தேதி முதல் 1 முதல் 8ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், பள்ளிக்கு கட்டாயம் மாணவர்கள் வரவேண்டும் என்று எந்தவொரு நிபந்தனையும் விதிக்கப்பவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
சென்னை : சென்னை கிண்டியில் செயல்பட்டு வரும் அண்ணா பல்கலைக்கழகத்தில் நேற்று முன்தினம் இரவு மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு…
சென்னை : தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல், தெற்கு ஆந்திர- வடதமிழக கடலோரப்பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு…
கோவை : கலங்கல், பீடம்பள்ளி, பட்டணம், பாப்பம்பட்டி, அக்கநாயக்கன்பாளையம், பட்டணம்புதூர், பாப்பம்பட்டிப்பிரிவு, கண்ணம்பாளையம், நடுப்பாளையம் (ஒரு மண்டலம்), சின்ன குயிலி,…
சென்னை : விடாமுயற்சி படத்திற்கான அப்டேட் எப்போது வெளியாகும் என்று தான் அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி மற்ற சில நடிகர்களின் ரசிகர்களும்…
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா ஐசிசி தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்து அசதியுள்ள…
சென்னை : மாவட்டத்தில் கிண்டி பகுதியில் உள்ள அண்ணா பல்கலைக்கழத்தில் படித்து வந்த மாணவி ஒருவர் இரண்டு பேரால் பாலியல் வன்கொடுமை…