பிரதமர் பங்கேற்ற விழாவில் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்ட தளவாய் சுந்தரம் !!
- கன்னியாகுமரியில் நடைபெற்ற அரசு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார்.
- பிரதமரின் பாதுகாப்பு அதிகாரிகள் அங்கிருந்த தமிழக அரசின் டெல்லி பிரதிநிதி தளவாய் சுந்தரம் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டார்.
மக்களவை தேர்தலில் கூட்டணி அமைப்பது தொடர்பாக சென்னையில் நடந்த அதிமுக-பாமக-பாஜக பேச்சுவார்த்தையில் கட்சிகளுக்கு இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.அதேபோல் அதிமுக- பாமக இடையேயான கூட்டணியில் பாமகவிற்கு 7 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது.பாஜகவுக்கு 5 தொகுதிகளை ஒதுக்கியது அதிமுக.
இந்நிலையில் கடந்த மார்ச் 2 ஆம் தேதி கன்னியாகுமரியில் நடைபெற்ற அரசு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார்.இதில் தமிழக ஆளுநர்,முதலமைச்சர், துணை முதலமைச்சர் மற்றும் அதிமுகவினர் பங்கேற்றனர்.இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தார்.
அதேபோல் அதிகாரிகள் பிரதமர் நரேந்திர மோடிக்கு பிற திட்டங்கள் தொடர்பாக விளக்கம் அளித்துக்கொண்டிருந்தனர்.
அப்போது பிரதமரின் பாதுகாப்பு அதிகாரிகள் அங்கிருந்த தமிழக அரசின் டெல்லி பிரதிநிதி தளவாய் சுந்தரம் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டார்.
https://twitter.com/advbiji/status/1101723067766628352
மேலும் இது தொடர்பாக தமிழக அரசின் டெல்லி பிரதிநிதி தளவாய் சுந்தரம் கூறுகையில்,பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்ட நிகழ்ச்சியில், பாதுகாப்புப்படை வீரர்கள் என்னை தடுத்தது பெரிய விஷயமே அல்ல என்று தெரிவித்துள்ளார்.இந்த சம்பவம் அதிமுகவினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியது.