பிரதமர் வேட்பாளராக ராகுல்காந்தியை முன்னிறுத்துகிறேன் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திமுக முன்னாள் தலைவர் கருணாநிதியின் சிலை திறப்பு விழா நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி,காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, கேரளா, ஆந்திரா மற்றும் புதுச்சேரி முதலமைச்சர் வந்துள்ளனர்.
இந்நிலையில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி,காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சென்னை வந்தடைந்த நிலையில் தற்போது சோனிய காந்தி சிலையை திறந்து வைத்தார்.
பின்னர் கருணாநிதி சிலை திறப்பு விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.இதில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறுகையில்,தமிழர்களின் வாழ்வில் இன்று மறக்க முடியாத நாள்.கருணாநிதி மறையவில்லை என்றே உணர்கிறேன்.கருணாநிதி எங்கும் செல்லவில்லை, லட்சக்கணக்கான தொண்டர்களின் உள்ளத்தில் நிலைத்திருக்கிறார். நாட்டில் ஜனநாயகத்தையும், மக்களையும் காக்கவே ஒன்றிணைந்துள்ளோம்.
கஜா புயல் பாதிப்பை பார்க்க பிரதமர் மோடி நேரில் வராதது ஏன்?…தமிழகம் எதிர்த்த திட்டங்களை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது.வெளிநாட்டில் மரணம் நடந்தால் பிரதமர் டுவிட் செய்கிறார். டெல்டாவில் மரணம் அடைந்தால் இரங்கல் தெரிவிப்பதில்லை.அதனால் தான் மோடி அரசை வீழ்த்த வேண்டும்.தன்னையே ரிசர்வ் வங்கியாக, தன்னையே வருமான வரித்துறையாக நினைத்துக் கொண்டிருக்கிறார் மோடி.
பிரதமர் மோடியின் ஆட்சியில் இந்தியா 15 ஆண்டுகள் பின்தங்கிவிட்டது சாடிஸ்ட் பிரதமராக செயல்பட்டு கொண்டுருக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி.
ராகுல் காந்தியை பிரதமராக்க முன்மொழிறேன். நாட்டை ராகுல்காந்தி காப்பாற்ற வேண்டும். மேடையில் மற்ற தலைவர்களும் ராகுலை வேட்பாளராக ஆதரிக்க வேண்டும் .ராகுல் காந்தியின் கரத்தை வலுப்படுத்த வேண்டும் என்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ஈரோடு : காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ்.இளங்கோவன் மறைவுக்கு பிறகு ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து, எந்த…
சென்னை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்பெரியார் குறித்து சர்ச்சையாக பேசியுள்ளது அரசியல் வட்டாரத்தில் புயலை கிளப்பியுள்ளது. சமீபத்தில் கடலூர்…
காஞ்சிபுரம் : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரருமான ரவிச்சந்திரன் அஷ்வின் இன்று…
திருப்பதி : ஆந்திர பிரதேச மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நாளை (ஜனவரி 10) முதல் ஜனவரி 19ஆம் தேதி…
சத்தீஸ்கர்: சத்தீஸ்கரின் முங்கேலி மாவட்டத்தில் இரும்பு ஆலையில் புகைபோக்கி இடிந்து விழுந்ததில் சில தொழிலாளர்கள் காயமடைந்தனர் என்றும், பலர் விபத்தில்…
ஹைதராபாத்: ஹைதராபாத்தின் செர்லப்பள்ளி பகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள ரயில் நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக, அதிநவீன வசதிகளுடன் கூடிய 'ஸ்லீப்பிங் பாட்'…