பிரதமர் நரேந்திர மோடி பாராட்டியது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது என்று அமைச்சர் வேலுமணி தெரிவித்துள்ளார்.
ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் 2020-யில் இறுதி சுற்றுக்கு தகுதி பெற்று 37 மணி நேர தொடர் மென்பொருள் வடிவமைப்பு போட்டியில் பங்கேற்கும் மாணவர்களுடன் பிரதமர் மோடி நேற்று உரையாற்றினார்.கோவையில் இருந்து கலந்துகொண்டு உள்ள தமிழக மாணவிக்கு தமிழில் வணக்கம் தெரிவித்து தனது கலந்துரையாடலை பிரதமர் தொடங்கினார்.
அதில், மழைப் பொழிவை அறிந்து கொள்ளும் தொழில்நுட்பம் குறித்து கோவை மாணவி தெரிவித்தது விவசாயிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும், உலகத்தரத்தில் நாட்டிலுள்ள ஒவ்வொரு கிராமத்திலும் அனைவருக்குமான சுகாதார வசதியை ஏற்படுத்த வேண்டும் ஆயுஷ்மான் பாரத் திட்டம் கிராமப்புறங்களில் மாற்றங்களை உருவாக்கி வருகிறது என தெரிவித்தார்.
இந்நிலையில் இது குறித்து அமைச்சர் வேலுமணி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில்,ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான்” இறுதிப் போட்டியில் பங்கேற்று, மக்களுக்கு பயனளிக்கும் தொழில் நுட்பம் பற்றிய திறனை வெளிப்படுத்திய கோவை மாணவர்கள் ஸ்வேதா மற்றும் குந்தன் ஆகியோரை மாண்புமிகு பாரத பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் பாராட்டியது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.
சிறு வயது முதலே மாணவர்கள் புதிய கண்டுபிடிப்புகளின் மீது அதிக ஆர்வம் காட்டி தங்களின் திறனை வளர்த்து நாட்டின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.
சென்னை: தமிழக சட்டப்பேரவையில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இடையே காரசார விவாதம் நடந்தது.…
மதுரை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அண்மையில் கடலூர் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்புகளின் போது…
சீனா : கார் ஒட்டிக்கொண்டு சாலையில் வேகமாக செல்லும் போது சில சமயங்களில், சாலைகளில் இருக்கும் மேடு பள்ளங்களை கவனிக்காமல்…
துபாய்: நடிகர் அஜித் குமார் விடாமுயற்சி, குட் பேட் அக்லி படங்களின் படப்பிடிப்பை முடித்துவிட்டு கார் ரேஸில் பங்கேற்க திட்டமிட்டு…
திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசியின் முக்கிய நிகழ்வான பரமபத வாசல் எனும் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. இந்த சொர்க்கவாசல்…
சென்னை: விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தனியார் பள்ளி கழிவுநீர் தொட்டியில் தவறி விழுந்து 4 வயது சிறுமி பலியானது பெரும்…