பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வருகை!! உலக அளவில் ட்ரெண்டிங்காகும் #GoBackSadistModi !!

Default Image
  • இன்று பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வருகிறார்.
  • #GoBackSadistModi என்ற ஹேஷ் டாக் உலக அளவில் 5 ஆம் இடத்தில் ட்ரெண்டாகி வருகிறது.

இன்று பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வருகிறார்.பின்னர்  சென்னை வண்டலூரில்  இன்று பிரதமர் நரேந்திர மோடி  பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார்.

மக்களவை தேர்தலில் கூட்டணி அமைப்பது தொடர்பாக சென்னையில் நடந்த அதிமுக-பாமக-பாஜக  பேச்சுவார்த்தையில் கட்சிகளுக்கு இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.பாஜகவுக்கு 5 தொகுதிகளை ஒதுக்கியது அதிமுக.

இந்த பொதுக்கூட்டத்தில் அதிமுக தலைமையில் அமைந்துள்ள கூட்டணி  கட்சிகளான பாமக-புதிய தமிழகம் -புதிய நீதிக்கட்சி பங்கேற்கின்றது.

இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வரவுள்ள நிலையில் சமூக வலைத்தளமான ட்விட்டரில் #GoBackModii மற்றும் #GoBackSadistModi என்ற ஹேஷ் டாக்குகள்  ட்ரெண்டாகி வருகிறது.

இதில்  #GoBackSadistModi என்ற ஹேஷ் டாக் உலக அளவில் 5 ஆம் இடத்தில் ட்ரெண்டாகி வருகிறது.அதேபோல் #GoBackSadistModi என்ற ஹேஷ் டாக் இந்திய அளவில் முதலிடத்தில் ட்ரெண்டாகி வருகிறது.சென்னை ட்ரெண்டிங்கில்  #GoBackSadistModi என்ற ஹேஷ் டாக்  3-ஆம் இடத்திலும்,#GoBackModii  என்ற ஹேஷ் டாக் 5-ஆம் இடத்திலும் ட்ரெண்டாகி வருகிறது.

அதேபோல் பிரதமர் நரேந்திர மோடிக்கு ஆதரவாக #TNWelcomesModi என்ற ஹேஷ் டாக் 4-ஆம் இடத்திலும் ட்ரெண்டாகி வருகிறது.

முதல் முறையாக # GoBackModi என்ற ஹேஷ் டாக் உலக அளவில் ட்ரெண்ட்: 

பிரதமர் நரேந்திர மோடி ராணுவ கண்காட்சியை தொடக்கி வைக்க ஏப்ரல் 12 ஆம் தேதி தமிழகம் வந்தார்.அப்போது பிரதமர் நரேந்திர மோடியின் தமிழக வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் # GoBackModi என்ற ஹேஷ் டாக் உலக அளவில் ட்ரெண்டாகியது.

இரண்டாவது முறையாக # GoBackModi என்ற ஹேஷ் டாக் உலக அளவில் ட்ரெண்ட்:

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டுவதற்காக  பிரதமர் நரேந்திர மோடி  ஜனவரி 27 ஆம் தேதி தமிழகம் வந்தார்.

இதனால்  ஜனவரி 27 ஆம் தேதி முதலே சமூக வலைத்தளமான ட்விட்டர் பக்கத்தில் மீணடும் அவர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து # GoBackModi என்ற ஹேஷ் டாக் ட்ரெண்டாகி வருகிறது.அதேபோல் பிரதமர் நரேந்திர மோடிக்கு வரவேற்பு அளிக்கும் வகையில் #MaduraiThanksModi என்று ஹேஷ் டாக்கும் ட்ரெண்டாகி வருகிறது.இந்த இரு ஹேஷ் டாக்குகளும் போட்டி போட்டு ட்ரெண்டாகியது.

 

அதேபோல் சமூக வலைத்தலமான ட்விட்டரில் ஜனவரி 27 ஆம் தேதியும்  # GoBackModi என்ற ஹேஷ் டாக்கும், #GoBackSadistModi என்ற ஹேஷ் டாக்கும்,#TNWelcomesModi என்ற ஹேஷ் டாக்கும் போட்டி போட்டு ட்ரெண்டாகியது.ஆனால் # GoBackModi என்ற ஹேஷ் டாக் தான் உலக அளவில் முதலிடத்தில் ட்ரெண்டாகியது.

மூன்றாவது முறையாக # GoBackModi என்ற ஹேஷ் டாக் உலக அளவில் ட்ரெண்ட்:

இந்திய பிரதமர் நரேந்திர மோடி இந்தியா முழுவதும் பல பகுதிகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

அதேபோல் திருப்பூருக்கு கடந்த பிப்ரவரி 10 ஆம் தேதி பிரதமர்  மோடி வருகை தந்தார்.இதற்கும் எதிர்ப்பு தெரிவித்து  #GOBACKMODI என்ற ஹேஷ்டக் மூன்றாவது முறையாக உலக அளவில் ட்ரெண்டாகியது .

மீண்டும்  #GoBackModi என்ற ஹேஷ் டாக் இந்திய அளவில் ட்ரெண்ட்:

அதேபோல் மார்ச் 1- ஆம் தேதி அரசு விழாவிற்காக பிரதமர் மோடி கன்னியாகுமரிக்கு வந்தார்.

இந்நிலையில் சமூக வலைதளமான ட்விட்டரில் மீண்டும் பிரதமர் நரேந்திர மோடி வருகையையொட்டி # GoBackModi என்ற ஹேஷ் டாக் இந்திய  அளவில் முதலிடத்தில் ட்ரெண்டாகி வந்தது குறிப்பிடத்தக்கது.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்