இன்று தமிழகத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார் பிரதமர் மோடி !!கூட்டணி கட்சிகளுக்கு அழைப்பு !!
- இன்று பிரதமர் நரேந்திர மோடி பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார்.
- இந்த பொதுக்கூட்டத்தில் அதிமுக தலைமையில் அமைந்துள்ள கட்சிகள் பங்கேற்கின்றது.
இன்று பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வருகிறார்.பின்னர் சென்னை வண்டலூரில் இன்று பிரதமர் நரேந்திர மோடி பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார்.
மக்களவை தேர்தலில் கூட்டணி அமைப்பது தொடர்பாக சென்னையில் நடந்த அதிமுக-பாமக-பாஜக பேச்சுவார்த்தையில் கட்சிகளுக்கு இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.அதேபோல் அதிமுக- பாமக இடையேயான கூட்டணியில் பாமகவிற்கு 7 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது.பாஜகவுக்கு 5 தொகுதிகளை ஒதுக்கியது அதிமுக.அதேபோல் அதிமுக கூட்டணியில் புதிய தமிழகம் மற்றும் புதிய நீதிக்கட்சி கட்சிக்கு தலா ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இந்த பொதுக்கூட்டத்தில் அதிமுக தலைமையில் அமைந்துள்ள கட்சிகள் பங்கேற்கின்றது.
ஆனால் அதிமுக-பாமக –பாஜக -தேமுதிக கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தையில் தொடர்ந்து இழுபறியே நீடித்து வருகிறது.
எனவே தேமுதிக இந்த கூட்டத்தில் பங்கேற்குமா என்ற கேள்வி அதிமுக கூட்டணியில் உள்ள கட்சிகளிடையே பெரிதாக எழுந்துள்ளது.