பிரதமர் நரேந்திர மோடி மதுரை தோப்பூரில் ரூ.1,264 கோடியில் 201.75 ஏக்கரில் அமையவுள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டினார்.
மதுரையில் உள்ள தோப்பூரில் சுமார் 1,264 கோடியில் அமைய இருக்கும் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பிரதமர் மோடி இன்று அடிக்கல் நாட்டுகிறார். இதனால் ஒட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை திட்டம் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்தது.
இந்த திட்டத்திற்க்காக 1, 264 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.அமையவுள்ள எய்ம்ஸ் , மருத்துவமனையில் 750 படுக்கை வசதி , 100 மருத்துவ படிப்பிற்கான இடங்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த விழாவில் கலந்துகொள்ள பிரதமர் மோடி டெல்லியில் இருந்து இன்று காலை தனி விமானத்தில் மதுரை வந்தடைந்தார் .பின்னர் மதுரை தோப்பூரில் ரூ.1,264 கோடியில் 201.75 ஏக்கரில் அமையவுள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் நரேந்திர மோடி.
இதில் தமிழக ஆளுநர் பன்வாரிலால், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், மக்களவை துணைத் தலைவர் தம்பிதுரை, மத்திய, மாநில அமைச்சர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ள நிலையில், இந்த…
சென்னை : பாமக பொதுக்குழு அந்த கூட்டத்தில் இளைஞரணி தலைவர் நியமனம் செய்யப்படுவது தொடர்பாக ராமதாஸ்- அன்புமணி இடையே வார்த்தை மோதல்…
சென்னை : ஆண்டுதோறும் பொங்கல்பண்டிகையை முன்னிட்டு பல படங்கள் வெளியாவது உண்டு. அப்படி தான் அடுத்த ஆண்டு (2025) பொங்கல் பண்டிகையை…
புதுச்சேரி : பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) புத்தாண்டு சிறப்பு பொதுக்குழு கூட்டம் இன்று (டிசம்பர் 28) புதுச்சேரி நாவற்குளம் நெடுஞ்சாலையில்,…
மெல்போர்ன் : சினிமா படத்தில் வரும் "இங்க வாய்ப்புன்றது நம்முளுக்கு அவ்ளோ சீக்கிரம் கிடைக்கிறது இல்ல இது நம்ப ஆட்டம்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ள நிலையில், இந்த சம்பவம்…